ADDED : ஜன 06, 2024 12:11 AM
நங்கநல்லுார்,ஆலந்துார் மண்டலம், 167வது வார்டு சார்பில் 'மக்களுடன் முதல்வர்' முகாம், நங்கநல்லுாரில் நடந்தது.
சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் அன்பரசன் பங்கேற்று, பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட 200க்கும் மேற்பட்ட மனுக்கள் குறித்த விபரங்களை அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.
எரிசக்தி, மின் வாரியம், வருவாய் மற்றும் பேரிடர் மீட்பு, நகராட்சி நிர்வாகம், குடிநீர் வழங்கல், ஊரக வளர்ச்சி, காவல் உள்ளிட்ட துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.