/உள்ளூர் செய்திகள்/சென்னை/ போதை பொருள் வைத்திருந்த 2 பெண்கள் கைது போதை பொருள் வைத்திருந்த 2 பெண்கள் கைது
போதை பொருள் வைத்திருந்த 2 பெண்கள் கைது
போதை பொருள் வைத்திருந்த 2 பெண்கள் கைது
போதை பொருள் வைத்திருந்த 2 பெண்கள் கைது
ADDED : மார் 24, 2025 11:46 PM
வேப்பேரி,: புளியந்தோப்பு, எம்.எஸ்., முத்துநகர் பகுதியில் உள்ள பெட்டிக்கடையில், நேற்று முன்தினம், போலீசார் திடீரென ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது, தடை செய்யப்பட்ட குட்கா புகையிலை பொருட்கள் மறைத்து வைக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து, கடையின் உரிமையாளர் பவானி, 42, என்பவரை கைது செய்த போலீசார், 3.400 கிலோ குட்கா புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.
அதேபோல், ஆர்.கே., நகர் பகுதியில் குட்கா புகையிலை பொருட்கள் வைத்திருந்த லட்சுமி, 35, என்பவரையும், போலீசார் கைது செய்தனர். அவரிடன் இருந்து, 2.400 கிலோ போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டது.