/உள்ளூர் செய்திகள்/சென்னை/ திரும்பி வந்த ஹைதராபாத் விமானம் உயிர் தப்பிய 159 பயணியர் திரும்பி வந்த ஹைதராபாத் விமானம் உயிர் தப்பிய 159 பயணியர்
திரும்பி வந்த ஹைதராபாத் விமானம் உயிர் தப்பிய 159 பயணியர்
திரும்பி வந்த ஹைதராபாத் விமானம் உயிர் தப்பிய 159 பயணியர்
திரும்பி வந்த ஹைதராபாத் விமானம் உயிர் தப்பிய 159 பயணியர்
ADDED : ஜூன் 29, 2025 10:35 PM
சென்னை:சென்னையில் இருந்து புறப்பட்ட ஹைதராபாத் விமானத்தில் இயந்திர கோளாறு ஏற்பட்டதில், மீண்டும் சென்னையில் தரையிறக்கப்பட்டது. இதனால், 159 பயணியர் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர்.
சென்னையில் இருந்து நேற்று அதிகாலை 1:10 மணிக்கு, தாய்லாந்து நாட்டின் தலைநகர் பாங்காக் செல்ல இருந்த 'தாய் ஏர்லைன்ஸ்' பயணியர் விமானத்தில், இயந்திர கோளாறு ஏற்பட்டது. 'விமானத்தை பழுது பார்த்த பின்பே மீண்டும் இயக்க முடியும்' என, குறிப்பு எழுதி வைத்து விட்டார்.
இதையடுத்து, 164 பயணியருடன் விமானம் தாமதமாக புறப்பட்டு செல்லும் என அறிவிக்கப்பட்டது. காலை 5:00 மணி வரை பழுது சரிசெய்யப்படாததையடுத்து, பயணம் ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
இந்த விமானம் இன்று புறப்பட்டு செல்லும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
அதேபோல, சென்னையில் இருந்து தெலுங்கானா மாநிலம் ைஹதராபாத்திற்கு 'இண்டிகோ ஏர்லைன்ஸ்' விமானம், 159 பயணியர் மற்றும் ஆறு விமான ஊழியர்களுடன் புறப்பட்டுச் சென்றது. நெல்லுார் அருகே சென்றபோது விமானத்தில் இயந்திர கோளாறு ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து, நேற்று மாலை 4:30 மணிக்கு, மீண்டும் சென்னைக்கே திரும்பி வந்து தரை இறக்கப்பட்டது. பயணியர் மாற்று விமானத்தில் ைஹதராபாத் அனுப்பி வைக்கப்பட்டனர்.
வெடிகுண்டு மிரட்டல்
சென்னை விமான நிலைய இயக்குநர் அலுவலகத்திற்கு நேற்று காலை 10:30 மணியளவில், இ - மெயில் வாயிலாக மர்ம நபர் ஒருவர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளார். அதில், உள்நாட்டு மற்றும் சர்வதேச விமான நிலையம் உட்பட, நாட்டில் உள்ள, 18 விமான நிலையங்களுக்கு திரவ வடிவில் வெடிகுண்டு வைத்து இருப்பதாக மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
மிரட்டல் விடுக்கப்பட்ட விமான நிலையங்களில், வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள் சோதனை செய்தனர். புரளி என, தெரியவந்தது.
இச்சம்பவம் குறித்து, சென்னை மாநகர சைபர் கிரைம் போலீசார் விசாரிக்கின்றனர்.