கடற்கரைகளில் 140 டன் குப்பை அகற்றம்
கடற்கரைகளில் 140 டன் குப்பை அகற்றம்
கடற்கரைகளில் 140 டன் குப்பை அகற்றம்
ADDED : செப் 02, 2025 02:02 AM
சென்னை:சென்னையில் திருவொற்றியூர், துறைமுகம்,
மெரினா கடற்கரை லுாப் சாலை, பட்டினப்பாக்கம் சீனிவாசபுரம் மற்றும் பாலவாக்கம் கடற்கரைகளில், நேற்று முன்தினம் 2,054 விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்டன.
இதில், சிலைகளின் எஞ்சிய பாகங்கள், மாலைகள், பூஜை பொருட்கள், மரக்கட்டைகள், இரும்பு கம்பிகள் என, 140 டன் குப்பை குவிந்தது.
அவற்றை நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று மாலை வரை, மாநகராட்சி துாய்மை பணியாளர்கள் அகற்றி, கொடுங்கையூர் மற்றும் பெருங்குடி குப்பை கிடங்கில் கொட்டினர்.
மேலும், கடற்கரை பகுதியை சுகாதாரமாக வைத்திருக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக, மாநகராட்சி அதிகாரிகள் கூறினர்.