/உள்ளூர் செய்திகள்/சென்னை/1 டன் ரேஷன் அரிசி அம்பத்துாரில் பறிமுதல்1 டன் ரேஷன் அரிசி அம்பத்துாரில் பறிமுதல்
1 டன் ரேஷன் அரிசி அம்பத்துாரில் பறிமுதல்
1 டன் ரேஷன் அரிசி அம்பத்துாரில் பறிமுதல்
1 டன் ரேஷன் அரிசி அம்பத்துாரில் பறிமுதல்
ADDED : ஜன 08, 2024 01:37 AM
அம்பத்துார்:சென்னை குடிமைப் பொருள் வழங்கல் துறை போலீசார், ஆவடி அடுத்த பட்டாபிராம் பேருந்து நிறுத்தம் அருகே, நேற்று முன்தினம் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது, 'டாடா ஏஸ்' வாகனத்தில், அரிசி மூட்டைகள் ஏற்றி வந்தனர். சந்தேகத்தின்படி வாகனத்தை சோதனை செய்த போது, அதில், 21 மூட்டைகளில் இருந்த, 1,050 கிலோ ரேஷன் அரிசி சிக்கியது.
விசாரணையில், திருநின்றவூர், பெரியார் நகரைச் சேர்ந்த மாரிமுத்து, 43, வியாசர்பாடி, பி.வி.காலனியை சேர்ந்த பிரகாஷ், 37, என தெரிந்தது.
மேலும், பட்டாபிராம் சுற்றுவட்டாரங்களில் ரேஷன் அரிசியை வாங்கி, ஆந்திராவிற்கு கடத்த முயன்றதும் தெரிந்தது. இருவரையும் கைது செய்த போலீசார், அரிசி மற்றும் வாகனத்தையும் பறிமுதல் செய்தனர்.