/உள்ளூர் செய்திகள்/சென்னை/ 'ஐபோன் பரிசு' என்று ஆசைகாட்டி வாலிபரிடம் ரூ.1.03 லட்சம் மோசடி 'ஐபோன் பரிசு' என்று ஆசைகாட்டி வாலிபரிடம் ரூ.1.03 லட்சம் மோசடி
'ஐபோன் பரிசு' என்று ஆசைகாட்டி வாலிபரிடம் ரூ.1.03 லட்சம் மோசடி
'ஐபோன் பரிசு' என்று ஆசைகாட்டி வாலிபரிடம் ரூ.1.03 லட்சம் மோசடி
'ஐபோன் பரிசு' என்று ஆசைகாட்டி வாலிபரிடம் ரூ.1.03 லட்சம் மோசடி
ADDED : மார் 11, 2025 07:45 PM
அண்ணா நகர்,:அமேசானில், ஐபோன் பரிசு தருவதாக கூறி, வாலிபரிடம், 1.03 லட்சம் ரூபாய் மோசடி செய்தவரை போலீசார் தேடி வருகின்றனர்.
அண்ணா நகர் மேற்கை சேர்ந்தவர் நிதிஷ், 25; தனியார் நிறுவன ஊழியர். இவர், அண்ணா நகர் போலீசில் அளித்த புகார்:
சமூக வலைளத்தில் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் அறிமுகமானார். 'அமேசானில் இருந்து உங்களுக்கு, ஐபோன் - 15 புரோ மேக்ஸ் பரிசாக வந்துள்ளது. முதலில், 72,000 ரூபாய் அனுப்பினால் ஐபோன் அனுப்பப்படும். அதன்பின் வங்கியே, பணத்தை உங்கள் கணக்கிற்கு திருப்பி அனுப்பிவிடும்' என்றார்.
வரி உள்ளிட்ட பல்வேறு காரணங்களை கூறியதால், சிறுக சிறுக, 1.03 லட்சம் ரூபாய் வரை அனுப்பினேன். பின், எதிர்தரப்பில் பேசிய நபரை தொடர்புக் கொள்ள முடியாததால், தான் ஏமாற்றப்பட்டதை உணர்தேன்.
சம்பந்தப்பட்ட மோசடி நபரை கண்டுப்பிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு புகாரில் குறிப்பிட்டிருந்தார்.
அண்ணா நகர் போலீசார் வழக்கு பதிந்து, புகாரின் உண்மை தன்மை குறித்து விசாரித்து, மோசடி நபரை தேடி வருகின்றனர்.