ADDED : ஜூன் 22, 2024 12:22 AM

உத்திரமேரூர்,
சென்னை ஸ்ரீஹரீயம் ஆயுர்வேதா மற்றும் செங்கல்பட்டு போதி தர்மர் ஆயுர்வேதா கிளினிக் சார்பில், சர்வதேச யோகா தினத்தையொட்டி, உத்திரமேரூர், சாலவாக்கம் அரசு மேல்நிலைப் பள்ளியில் யோகா பயிற்சி அளிக்கப்பட்டது.
இதற்கான ஏற்பாடுகளை, 'ஞானவர்ஷினி' தொண்டு நிறுவனத்தினர் செய்திருந்தனர்.
ஸ்ரீஹரீயம் ஆயுர்வேதா மருத்துவர் மீராசுதீர், பயிற்சிகள் அளித்தார்.
இதில், போதிதர்மர் ஆயுர்வேதா கிளினிக் மருத்துவர் தாமரை மணவாளன், சாலவாக்கம் ஊராட்சி தலைவர் சத்யா சக்திவேல், பள்ளி பொறுப்பு தலைமை ஆசிரியர் ரவி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.