/உள்ளூர் செய்திகள்/சென்னை/ மதுக்கடைக்கு எதிர்ப்பு பெண்கள் முற்றுகை மதுக்கடைக்கு எதிர்ப்பு பெண்கள் முற்றுகை
மதுக்கடைக்கு எதிர்ப்பு பெண்கள் முற்றுகை
மதுக்கடைக்கு எதிர்ப்பு பெண்கள் முற்றுகை
மதுக்கடைக்கு எதிர்ப்பு பெண்கள் முற்றுகை
ADDED : மார் 13, 2025 11:28 PM

செங்குன்றம், செங்குன்றம் அருகே, விளாங்காடுபாக்கம் ஊராட்சியில், அரசு 'டாஸ்மாக்' கடை புதிதாக திறப்பதாக, தகவல் வெளியானது.
இதையடுத்து, பெண்கள் உள்ளிட்ட அப்பகுதிவாசிகள், டாஸ்மாக் வர உள்ள கடையை முற்றுகையிட்டனர்.
அப்போது, 'மதுக்கடையை திறந்தால் பெண்கள், பணிக்கு செல்வோர், பள்ளி மாணவர்கள் பாதிக்கப்படுவர்' என, கோஷம் எழுப்பினர்.
தகவலறிந்து வந்த செங்குன்றம் போலீசார், அவர்களிடம் பேச்சு நடத்தினர். ஆனால் போலீசாரின் சமரசத்தை ஏற்காத பகுதிவாசிகள் 100க்கும் மேற்பட்டோர், கடை திறப்பு எதிர்ப்பு தெரிவித்து, போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பின், அங்கிருந்து கலைந்து சென்ற பகுதிவாசிகள், கடை திறக்கக்கூடாது என, ஊராட்சி நிர்வாகத்திடம் மனு அளித்தனர்.