/உள்ளூர் செய்திகள்/சென்னை/ 5 ஆண்டாக தொடரும் கழிவுநீர் பிரச்னை நிரந்தர தீர்வு காண வாரியம் முன்வருமா? 5 ஆண்டாக தொடரும் கழிவுநீர் பிரச்னை நிரந்தர தீர்வு காண வாரியம் முன்வருமா?
5 ஆண்டாக தொடரும் கழிவுநீர் பிரச்னை நிரந்தர தீர்வு காண வாரியம் முன்வருமா?
5 ஆண்டாக தொடரும் கழிவுநீர் பிரச்னை நிரந்தர தீர்வு காண வாரியம் முன்வருமா?
5 ஆண்டாக தொடரும் கழிவுநீர் பிரச்னை நிரந்தர தீர்வு காண வாரியம் முன்வருமா?
ADDED : ஜூலை 13, 2024 12:47 AM

வேளச்சேரி, அடையாறு மண்டலம்,வேளச்சேரி, சீதாராம் நகரில் 250க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன.
இந்த நகரில், 1994ம் ஆண்டு, கழிவுநீர் குழாய் பதித்து, வீடுகளுக்கு இணைப்பு வழங்கப்பட்டது. அடைப்பை அகற்றும் வகையில், 40 அடி இடைவெளியில், 11 இடங்களில் இயந்திரநுழைவாயில் மூடி அமைக்கப்பட்டு உள்ளது.
இந்த கழிவுநீர், வேளச்சேரி பிரதான சாலையை கடந்து, முருகு நகரில் உள்ள கழிவுநீர் வெளியேற்றும் நிலையத்திற்கு செல்கிறது. குழாய் பதித்த பின், நகரில் உள்ள சாலைகள் 5 அடி வரை உயர்ந்தன.
இதனால், இந்த குழாயில் இருந்து கழிவுநீர் வெளியேறி, அப்பகுதியில் பாதிப்பு ஏற்படுகிறது.
பகுதிமக்கள் கூறியதாவது:
தினமும் காலை 10:30 முதல் 12:30 வரை, மதியம் 1:30 முதல் 4:30 மணி வரை, 11வது மூடியில் இருந்து கழிவுநீர் கொப்பளித்து வெளியேறி நகர் முழுதும் தேங்கி நிற்கிறது.
தினமும் கழிவுநீரில் நடந்து செல்வதால் காலில் அரிப்பு ஏற்படுகிறது.
வணிக நிறுவனங்கள், கழிவு பொருட்களுடன் சேர்த்து கழிவுநீரை குழாயில் விடுகின்றனர். ஐந்து ஆண்டுகளாக நாங்கள் சிரமப்படுவது அதிகாரிகளுக்கு தெரியும். நிரந்தர தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.