/உள்ளூர் செய்திகள்/சென்னை/ 70 வார்டுகளிலும் திட்ட பணிகள் மோசம் மேயர் மீது நல சங்கத்தினர் அதிருப்தி 70 வார்டுகளிலும் திட்ட பணிகள் மோசம் மேயர் மீது நல சங்கத்தினர் அதிருப்தி
70 வார்டுகளிலும் திட்ட பணிகள் மோசம் மேயர் மீது நல சங்கத்தினர் அதிருப்தி
70 வார்டுகளிலும் திட்ட பணிகள் மோசம் மேயர் மீது நல சங்கத்தினர் அதிருப்தி
70 வார்டுகளிலும் திட்ட பணிகள் மோசம் மேயர் மீது நல சங்கத்தினர் அதிருப்தி
ADDED : ஜூலை 26, 2024 12:37 AM
தாம்பரம், தாம்பரம், செம்பாக்கம், பல்லாவரம், பம்மல், அனகாபுத்துார் நகராட்சிகள், பெருங்களத்துார், பீர்க்கன்காரணை, மாடம்பாக்கம், சிட்லப்பாக்கம், திருநீர்மலை பேருராட்சிகள் என, 10 உள்ளாட்சிகளை இணைத்து, தாம்பரம் மாநகராட்சி 2021ல் உருவாக்கப்பட்டது.
ஐந்து மண்டலங்களில் 70 வார்டுகள் என மாநகராட்சியானதும், அடிப்படை பணிகள் உடனுக்குடன் நிறைவேறும் என மக்கள் எதிர்பார்த்தனர். ஆனால், குப்பை பிரச்னை, பராமரிப்பற்ற பூங்காக்கள் உள்ளிட்ட பணிகள் படுமோசமான நிலையிலே உள்ளன.
பாதாள சாக்கடை இருந்தும், நீர்நிலைகளில் கழிவுநீர் கலப்பது அதிகரித்து விட்டது. சாலைகள் நடப்பதற்கே லாயக்கற்ற நிலையில் உள்ளன. மொத்தத்தில், மக்களின் அடிப்படை பிரச்னைகள் தீர்க்கப்படவில்லை.
மாநகராட்சி மேயராக உள்ள தி.மு.க.,வின் வசந்தகுமாரி, வார்டுகளில் முறையாக ஆய்வு செய்து, மக்களின் குறைகளை கேட்டு பிரச்னைகளை நிவர்த்தி செய்வதில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
குடியிருப்போர் நலச்சங்கத்தினர் கூறியதாவது:
மேயர் என்பவர், வார்டுகள்தோறும் சென்று, ஆய்வு செய்ய வேண்டும். பொதுமக்களின் குறைகளை கேட்டு, நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆனால், இதற்கு விதிவிலக்காக, தாம்பரம் மேயர் உள்ளார்.
அரசு நிகழ்ச்சி, பூமி பூஜை, கட்சி நிகழ்ச்சி, அமைச்சர் ஆய்வு ஆகிய நிகழ்ச்சிகளில் மட்டுமே அவரை பார்க்க முடிகிறது.
கடந்த ஆண்டு, மழையின் போது, அவ்வப்போது களத்தில் இருந்தார். ஆனால், அனைத்து பகுதிகளுக்கும் செல்லவில்லை.
தற்போது, ஐந்து மண்டலங்களிலும் குப்பை, கழிவுநீர், கொசு உள்ளிட்ட பிரச்னை தலை விரித்தாடுகிறது. இதை யாரும் கண்டுகொள்வதே இல்லை.
மாநகராட்சியாக தரம் உயர்த்தியும், பேரூராட்சி பகுதிகள் இன்னும் முன்னேற்றம் இன்றி அப்படியே தான் உள்ளன. மாநகராட்சியின் அனைத்து வார்டுகளிலும் மேயர் ஆய்வு செய்து, தேவையான வசதிகளை செய்து தரவேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.