/உள்ளூர் செய்திகள்/சென்னை/ மின் கசிவால் வெடித்து சிதறிய வாஷிங் மிஷின் மின் கசிவால் வெடித்து சிதறிய வாஷிங் மிஷின்
மின் கசிவால் வெடித்து சிதறிய வாஷிங் மிஷின்
மின் கசிவால் வெடித்து சிதறிய வாஷிங் மிஷின்
மின் கசிவால் வெடித்து சிதறிய வாஷிங் மிஷின்
ADDED : ஜூன் 01, 2024 12:42 AM
அரும்பாக்கம், அரும்பாக்கம், 'என்' பிளாக், ஈ.வெ.ரா., தெருவைச் சேர்ந்தவர் ஜமில் அனிதா, 54. இவர் நேற்று மாலை, வீட்டில் வாஷிங் மிஷினில் துணி துவைத்தார்.
அப்போது, எதிர்பாராத விதமாக, வாஷிங் மிஷின் பெரும் சத்தத்துடன் வெடித்து சிதறியது. இந்த விபத்தில், வீட்டில் இருந்த கிரைண்டர் உள்ளிட்ட பொருட்கள் சேதமடைந்தன.
சம்பவம் அறிந்து வந்த கோயம்பேடு தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர். முதல்கட்ட விசாரணையில், வீட்டில் ஏற்பட்ட மின்கசிவால், வாஷிங் மிஷின் வெடித்தது தெரிந்தது.
விபத்தில், வீட்டில் இருந்த 25,000 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் சேதமடைந்ததாக கூறப்படுகிறது. உயிர்ச்சேதம் ஏதுமில்லை. இதுகுறித்து அரும்பாக்கம் போலீசார் விசாரிக்கின்றனர்.