/உள்ளூர் செய்திகள்/சென்னை/ஆயுர்வேதம் ஊக்குவிக்க விஜயேந்திரர் வலியுறுத்தல்ஆயுர்வேதம் ஊக்குவிக்க விஜயேந்திரர் வலியுறுத்தல்
ஆயுர்வேதம் ஊக்குவிக்க விஜயேந்திரர் வலியுறுத்தல்
ஆயுர்வேதம் ஊக்குவிக்க விஜயேந்திரர் வலியுறுத்தல்
ஆயுர்வேதம் ஊக்குவிக்க விஜயேந்திரர் வலியுறுத்தல்
ADDED : ஜூன் 19, 2024 12:31 AM

சென்னை, ''அனைத்து உயிரினங்களின் ஆரோக்கியத்திற்காக, ஆயுர்வேதம் ஊக்குவிக்கப்பட வேண்டும்,'' என, காஞ்சி சங்கராச்சாரியார் ஸ்ரீசங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் வலியுறுத்தினார்.
சென்னை, பூந்தமல்லி அடுத்த நசரத்பேட்டையில், ஸ்ரீ ெஜயேந்திர சரஸ்வதி ஆயுர்வேத கல்லுாரி மற்றும் மருத்துவமனை உள்ளது. இங்கு புதுப்பிக்கப்பட்ட, 60 படுக்கைகள் மற்றும் பஞ்சகர்மா சிகிச்சை அறைகளுடன் கூடிய, பொது வார்டு கட்டடத்தை, நேற்று விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் திறந்து வைத்தார்.
அவர் பேசியதாவது:
பழங்காலத்தில் இருந்தே, பாரதம் அறிவு மற்றும் ஞானத்தின் ராஜ்ஜியமாக இருந்தது. ஆரோக்கியமான வாழ்க்கைக்காக, நாட்டிய சாஸ்திரம், சங்கீதம், யோகா, ஆயுர்வேத சாஸ்திரம் என, பல்வேறு அறிவியல் மற்றும் அறிவு அமைப்புகளை, உலகிற்கு வழங்கி உள்ளது.
ஆயுர்வேதம் மற்றும் பிற இந்திய அறிவு முறைகளை, சமஸ்கிருதத்தின் அசல் எழுத்துகள் வழியாக புரிந்துகொள்ள வேண்டும்.
ஏனெனில் சமஸ்கிருதம் மற்ற மொழிகளை போல் இல்லாமல், இந்த விஷயத்தில் பரந்த புரிதலை அளிக்கிறது.
ஆதிசங்கரர் தன் சூத்திரத்தில், நோயால் பாதிக்கப்பட்டவர்களை துயரங்களில் இருந்து வெளியேற்றுவதன் அவசியத்தை, விரிவாகக் கூறியுள்ளார். அனைத்து உயிரினங்களின் ஆரோக்கியத்திற்காக, ஆயுர்வேதம் ஊக்குவிக்கப்பட வேண்டும்.
ஆயுர்வேத மருத்துவம், அனைத்து தரப்பு மக்களையும் சென்றடைய வேண்டும். நோயற்ற சமுதாயத்தை உருவாக்க, அனைத்து முயற்சிகளையும், மருத்துவமனை நிர்வாகம் எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சியில், காஞ்சி சங்கரா பல்கலை வேந்தர் வேம்பட்டி குடும்ப சாஸ்திரி, துணைவேந்தர் ஸ்ரீநிவாசு, சுகாதார அறிவியல் டீன் சுவாமிநாதன், அறிவியல் துறை டீன் வெங்கடரமணன், ஆயுர்வேத கல்லுாரி முதல்வர் சித்தரஞ்சன், துணை முதல்வர் பிரவீன் கலந்து கொண்டனர்.