Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சென்னை/ சிறுமி பாலியல் பலாத்காரம் தோழி உட்பட இருவர் கைது

சிறுமி பாலியல் பலாத்காரம் தோழி உட்பட இருவர் கைது

சிறுமி பாலியல் பலாத்காரம் தோழி உட்பட இருவர் கைது

சிறுமி பாலியல் பலாத்காரம் தோழி உட்பட இருவர் கைது

ADDED : ஜூன் 09, 2024 01:13 AM


Google News
விருகம்பாக்கம்:பெரவள்ளூரைச் சேர்ந்த 15 வயதான, பிளஸ் 1 படிக்கும் மாணவியின் பெற்றோர், கடந்த 6ம் தேதி, விருகம்பாக்கம் மகளிர் காவல் நிலையத்தில் ஒரு புகார் அளித்திருந்தனர்.

அதில் குறிப்பிட்டிருந்ததாவது:

எங்கள் மகளுக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டதை அடுத்து, மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றோம். மருத்துவ பரிசோதனையில், அந்தரங்க உறுப்பில் பலத்த காயம் ஏற்பட்டிருப்பது தெரிந்தது.

அதிர்ச்சியடைந்து, இது குறித்து அவளிடம் விசாரித்ததில், 'கபே'வில் டீ சாப்பிட சென்ற போது அகிரா, 18, என்பவர் தோழியாகி உள்ளார்.

கடந்த 13ம் தேதி சாலிகிராமத்தில் உள்ள ஒரு ஹோட்டலில், அகிராவின் பிறந்தநாள் கொண்டாட்டம் நடந்துள்ளது. இதில் பங்கேற்ற போது வில்லியம்ஸ், சோமேஷ் என்ற இருவரை, எங்கள் மகளுக்கு அகிரா அறிமுகம் செய்துள்ளார்.

பின், அகிரா வழங்கிய இனிப்பை சாப்பிட்டதில், எங்கள் மகளுக்கு மயக்கம் வருவது போல இருந்துள்ளது.

அகிராவிடம் தண்ணீர் கேட்ட போது, எங்கள் மகளை மற்றொரு அறைக்கு அழைத்து சென்று, உள்ளே தள்ளி கதவை பூட்டியுள்ளார்.

அந்த அறையிலிருந்த வில்லியம்ஸ், சோமேஷ் ஆகியோர், அவளை பாலியல் பலாத்காரம் செய்து, வீடியோவாக பதிவு செய்துள்ளனர்.

இதையடுத்து, மறுநாள் காலை மகளுடன் எங்கள் வீட்டிற்கு வந்த அகிரா, மூன்று நாட்கள் தங்கிச் சென்றார். 'நடந்த சம்பவம் குறித்து யாரிடமும் கூறக்கூடாது' என மிரட்டியுள்ளார்.

இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இது குறித்து விசாரித்த விருகம்பாக்கம் மகளிர் போலீசார், 'போக்சோ' வழக்கு பதிவு செய்து, பெருங்களத்துாரைச் சேர்ந்த அகிரா, 18, மற்றும் வடபழனியைச் சேர்ந்த சோமேஷ், 21, ஆகியோரை நேற்று கைது செய்தனர்.

தலைமறைவான வில்லியம்ஸ் என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us