/உள்ளூர் செய்திகள்/சென்னை/ மின்சாரம் பாய்ந்து இருவர் உயிரிழப்பு மின்சாரம் பாய்ந்து இருவர் உயிரிழப்பு
மின்சாரம் பாய்ந்து இருவர் உயிரிழப்பு
மின்சாரம் பாய்ந்து இருவர் உயிரிழப்பு
மின்சாரம் பாய்ந்து இருவர் உயிரிழப்பு
ADDED : ஜூன் 08, 2024 12:23 AM
காசிமேடு,
காசிமேடு பகுதியைச் சேர்ந்தவர் சீதாராமன், 58. திருமண மண்டபத்தில் துாய்மை பணியாளராக பணிபுரிந்தார்.
நேற்று முன்தினம் நள்ளிரவு, காசிமேடு எஸ்.என்.செட்டி தெரு, பாரத் பெட்ரோல் பங்க் எதிரே, சாலையை கடக்க முயன்றார். சென்டர் மீடியனில் இருந்த சிறிய வழியே செல்லும் போது, நடுவிலிருந்த தெருவிளக்கு கம்பத்தை பிடித்துள்ளார். அப்போது மின்சாரம் பாய்ந்து, மயங்கி விழுந்துள்ளார்.
அங்கிருந்தோர் அவரை மீட்டு, 108 ஆம்புலன்சுக்கு தகவல் அளித்தனர். அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பரிசோதித்த போது, முதியவர் ஏற்கனவே உயிரிழந்தது தெரிந்தது.
காசிமேடு போலீசார் உடலை கைப்பற்றி, ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, நேற்று வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
அம்பத்துார் அடுத்த முகப்பேர் சாலையில், சென்னை மாநகராட்சி வாயிலாக, 1.69 கோடி ரூபாய் மதிப்பீட்டில், புது நவீன தகனமேடை கட்டுமான பணி நடக்கிறது.
தனியார் கட்டுமான நிறுவனம், இப்பணியை மேற்கொண்டு வருகிறது. செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்த வீரபத்திரன், 30, என்பவர், நேற்று காலை 8:00 மணியளவில், இப்பணிகளை கண்காணிக்க சென்றார்.
மேல்தளத்தில் நடந்த பணியை கண்காணித்தபோது, அருகில் மின் கம்பத்தில் இருந்த உயர்மின் அழுத்த கம்பியில் கை உரசியது. இதில், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து, அம்பத்துார் தொழிற்பேட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.
9 மாடுகள் பலி
மாமல்லபுரம் சுற்றுப்புற பகுதிகளில், நேற்று முன்தினம் இரவு, இடியுடன் கூடிய கனமழை பெய்தது. இந்த நிலையில், மாமல்லபுரம் அடுத்த பையனுார் ஊராட்சி, கூத்தவாக்கம் பகுதியில், சிதம்பரம் என்பவரின் வயல்வெளி கம்பி வேலியில், மின் கம்பி அறுந்து விழுந்திருந்தது.
அப்போது, அவ்வழியே சென்ற பையனுாரைச் சேர்ந்த ஐந்து பேருக்கு சொந்தமான, ஆறு பசுக்கள் மற்றும் மூன்று காளைகள் என, 9 மாடுகள் மின்சாரம் பாய்ந்து இறந்தன.