/உள்ளூர் செய்திகள்/சென்னை/ போதை மாத்திரை வைத்திருந்த இருவர் கைது போதை மாத்திரை வைத்திருந்த இருவர் கைது
போதை மாத்திரை வைத்திருந்த இருவர் கைது
போதை மாத்திரை வைத்திருந்த இருவர் கைது
போதை மாத்திரை வைத்திருந்த இருவர் கைது
ADDED : ஜூன் 12, 2024 12:42 AM
எம்.ஜி.ஆர்., நகர், நெசப்பாக்கம் அண்ணா பிரதான சாலை மற்றும் இணைப்பு சாலை அருகே, எம்.ஜி.ஆர்., நகர் போலீசார் நேற்று காலை ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, கே.கே., நகர், 5வது செக்டாரை சேர்ந்த ஜெனேஸ்வரன், 22 மற்றும் எம்.ஜி.ஆர்., நகர் சூளைப்பள்ளத்தை சேர்ந்த ரமேஷ், 28, ஆகிய இருவரை சந்தேகித்து மடக்கி விசாரித்தனர்.
இதில், அவர்கள் கஞ்சா மற்றும் போதை மாத்திரைகளை வைத்திருந்தது தெரியவந்தது. இவர்களிடம், 1.5 கிலோ கஞ்சா மற்றும் 46 டைடோல் போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டது. இருவரையும் கைது செய்து போலீசார் விசாரிக்கின்றனர்.