Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சென்னை/ அரக்கோணம் தடத்தில் ரயில்கள் ரத்து

அரக்கோணம் தடத்தில் ரயில்கள் ரத்து

அரக்கோணம் தடத்தில் ரயில்கள் ரத்து

அரக்கோணம் தடத்தில் ரயில்கள் ரத்து

ADDED : ஜூலை 31, 2024 12:11 AM


Google News
சென்னை, ஆவடி ரயில்வே பணிமனையில், நாளை நள்ளிரவு 12:00 மணி முதல் அதிகாலை 3:30 மணி வரை மேம்பாட்டு பணி நடக்கிறது. இதனால், மின்சார ரயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளன .

 பட்டாபிராம் மிலிட்டரி சைடிங் - ஆவடி இன்று இரவு 11:50, சென்ட்ரல் - ஆவடி இன்று இரவு 11:40 மணி ரயில்கள் ரத்து செய்யப்படுகின்றன

 சென்ட்ரல் - ஆவடி இன்று நள்ளிரவு 12:15 மணி, ஆவடி - பட்டாபிராம் அதிகாலை 3:00 மணி ரயில் நாளை ரத்து செய்யப்படுகிறது

ஒரு பகுதி ரத்து


 சென்ட்ரல் - பட்டாபிராம் மிலிட்டரி சைடிங் இரவு 10:40, பட்டாபிராம் மிலிட்டரி சைடிங் - சென்ட்ரல் இரவு 10:45 மணி ரயில்கள் இன்று ஆவடி வரை மட்டுமே இயக்கப்படும்

 பட்டாபிராம் மிலிட்டரி சைடிங் - சென்ட்ரல் அதிகாலை 3:30 மணி ரயில் நாளை ஆவடியில் இருந்து இயக்கப்படும்

 சென்ட்ரல் - அரக்கோணம் காலை 9:10, காலை 11:00, சென்ட்ரல் -திருத்தணி காலை 10:00 மணி ரயில்கள் இன்று திருவள்ளூர் வரை மட்டுமே இயக்கப்படும்

 அரக்கோணம் - சென்ட்ரல் காலை 11:15, நண்பகல் 12:00 மணி ரயில்கள் இன்று திருவள்ளூரில் இருந்து இயக்கப்படும்

 திருத்தணி - சென்ட்ரல் நண்பகல் 12:35 மணி ரயில் திருவள்ளூரில் இருந்து இன்று இயக்கப்படும்





      Our Apps Available On




      Dinamalar

      Follow us