/உள்ளூர் செய்திகள்/சென்னை/ தெருவோர கடைகளில் வியாபாரிகளுக்கு பயிற்சி தெருவோர கடைகளில் வியாபாரிகளுக்கு பயிற்சி
தெருவோர கடைகளில் வியாபாரிகளுக்கு பயிற்சி
தெருவோர கடைகளில் வியாபாரிகளுக்கு பயிற்சி
தெருவோர கடைகளில் வியாபாரிகளுக்கு பயிற்சி
ADDED : ஜூலை 21, 2024 01:00 AM
சென்னை:சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகையில், தெருவோர வியாபாரிகளுக்கு பதிவு சான்றிதழ், மருத்துவ பரிசோதனை சான்றிதழ் வழங்கும் முகாம், இரண்டாம் கட்டமாக நேற்று நடந்தது. இதில், 450 தெருவோர வியாபாரிகள் பங்கேற்றனர்.
அவர்களுக்கு, தோல் சார்ந்த பாதிப்பு உள்ளதா போன்ற உடற்பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. மேலும், தெருவோர கடைகளை மேம்படுத்துதல் தொடர்பான பயிற்சியும் அளிக்கப்பட்டுள்ளது.
உணவு பாதுகாப்பு துறை சென்னை மாவட்ட நியமன அலுவலர் சதீஷ்குமார் கூறியதாவது:
சென்னை மாவட்டத்தில் உள்ள தெருவோர உணவு விற்பனையில் ஈடுபடும் அனைத்து கடை உரிமையாளர்களும், உணவு பாதுகாப்பு துறை பதிவு பெறுவது அவசியம். மேலும், தோல் நோய் போன்ற பாதிப்புகள் இல்லை என்ற மருத்துவ சான்று வைத்திருப்பதும் முக்கியம். அதன்படி, அனைவருக்கும் மருத்துவ முகாம் நடத்தப்பட்டு வருகிறது.
அத்துடன், வியாபாரத்தை மேம்படுத்துதல், சுகாதாரமான இடத்தை வைத்திருந்தல் போன்றவையும் பயிற்சி அளிக்கப்படுகிறது. இவற்றை இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய அதிகாரிகள், 'வீடியோ கான்பரன்சில்' பங்கேற்று பார்வையிட்டனர்.
இவ்வாறு அவர் கூறினார்.