/உள்ளூர் செய்திகள்/சென்னை/ கும்மிடி தடத்தில் ரயில் சேவை பாதிப்பு கும்மிடி தடத்தில் ரயில் சேவை பாதிப்பு
கும்மிடி தடத்தில் ரயில் சேவை பாதிப்பு
கும்மிடி தடத்தில் ரயில் சேவை பாதிப்பு
கும்மிடி தடத்தில் ரயில் சேவை பாதிப்பு
ADDED : ஜூன் 20, 2024 12:47 AM
சென்னை, சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து கும்மிடிப்பூண்டிக்கு நேற்று மாலை 5:05 மணிக்கு புறப்பட்ட மின்சார ரயில், எண்ணுார் ரயில் நிலையத்தை அடைந்தபோது, ரயிலின் மின் இணைப்பு கருவி பழுதடைந்தது.
இதையடுத்து, இந்த ரயில் மெதுவாக நகர்ந்து, அத்திப்பட்டு புதுநகர் நிலையத்தை மாலை 5:45 மணிக்கு அடைந்தபோது, மீண்டும் பழுதடைந்தது. இதனால், பின்தொடர்ந்து வந்த மூன்று மின்சார ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன.
தகவலறிந்து வந்த ரயில்வே பொறியாளர்கள், ரயிலின் மின் இணைப்பு கருவியில் ஏற்பட்ட பழுதை ஒரு மணி நேரம் போராடி சரிசெய்தனர். மீண்டும் 6:50 மணிக்கு அந்த ரயில் புறப்பட்டு சென்றபோது, மீஞ்சூரில் மீண்டும் பழுது ஏற்பட்டது. பின், ரயில் ஓரங்கட்டப்பட்டது. பயணியர், அடுத்து வந்த மின்சார ரயிலில் ஏறி பயணித்தனர்.
மின்சார ரயிலில் அடுத்தடுத்து ஏற்பட்ட பழுதால், மின்சார ரயில் சேவை கடுமையாக பாதிக்கப்பட்டது.