Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சென்னை/ மாநில செஸ் போட்டி பதிவுக்கு இன்றே கடைசி

மாநில செஸ் போட்டி பதிவுக்கு இன்றே கடைசி

மாநில செஸ் போட்டி பதிவுக்கு இன்றே கடைசி

மாநில செஸ் போட்டி பதிவுக்கு இன்றே கடைசி

ADDED : ஜூன் 21, 2024 12:17 AM


Google News
சென்னை, ஜி.எம்., செஸ் அகாடமி சார்பில், சிறுவர்களுக்கான மாநில அளவிலான செஸ் போட்டி, தாம்பரம் அடுத்த செம்பாக்கத்தில் உள்ள ஆல்பா சர்வதேச மற்றும் மெட்ரிக் பள்ளியில் நாளை மறுநாள் நடக்கிறது.

போட்டியில் 8, 10, 13, 25 வயதிற்கு உட்பட்டோருக்கு தனித்தனியாக போட்டிகள் நடக்கின்றன.

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உட்பட மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து சிறுவர் - சிறுமியர் பங்கேற்கின்றனர். 'பிடே' விதிப்படி, 'சுவிஸ்' அடிப்படையில் போட்டிகள் நடக்கின்றன.

ஒவ்வொரு பிரிவிலும் முதல் 25 இடங்களைப் பிடிப்போருக்கு, பரிசுகள் வழங்கப்படுகின்றன.

போட்டியில் பங்கேற்க விரும்புவோர், இன்று மாலைக்குள் பதிவு செய்து கொள்ளலாம்.

விபரங்களுக்கு, 88382 29938, 99415 14097 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம் என, போட்டி ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்து உள்ளனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us