இன்று இனிதாக பகுதிக்கு (24/07/24)
இன்று இனிதாக பகுதிக்கு (24/07/24)
இன்று இனிதாக பகுதிக்கு (24/07/24)
ADDED : ஜூலை 24, 2024 01:20 AM
ஆன்மிகம்
பார்த்தசாரதி பெருமாள் கோவில்
நித்யானுசந்தானம் - -மாலை 6:00 மணி. பேயாழ்வார் திருநட்சத்திர விழா - -மாலை 6:45 மணி. இடம்: திருவல்லிக்கேணி.
கபாலீஸ்வரர் கோவில்
சதுர்த்தியை முன்னிட்டு, நர்த்தன விநாயகர் அபிஷேகம். -மாலை 4:30 மணி. இடம்: மயிலாப்பூர்.
குருவாயூரப்பன் கோவில்
கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, மண்டலாபிஷேகம் - -காலை 6:30 மணி. உபன்யாசம், நாம சங்கீர்த்தனம், இன்னிசைக் கச்சேரி - -மாலை 6:30 மணி. இடம்: நங்கநல்லுார்.
நாம சங்கீர்த்தன உற்சவம்
சத்குரு பாதுகா பூஜை, நாம சங்கீர்த்தனங்கள், சீதா கல்யாணம், தேவாரம், திருப்புகழ், அபங்க சங்கீர்த்தனம். -மாலை 3:00 மணி. இடம்: வரசித்தி விநாயகர் கோவில், நங்கநல்லுார்.
பாரம்பரிய பொருட்கள் கண்காட்சி
பூம்புகார் நிறுவனம் சார்பில் பாரம்பரிய கைவினைப் பொருட்கள் கண்காட்சி-. காலை 10:00 முதல் இரவு 8:00 மணி வரை. இடம்: சி.பி.ஆர்ட் மையம், ஆழ்வார்பேட்டை.
ஸ்ரீபாலசுப்ரமணிய சங்கத்தின் உபன்யாசம்
ஸ்ரீ சிருங்கேரி ஞானானந்த பாரதி சுவாமிகள் இயற்றிய, ஸ்ரீ ராமநட்சத்திர மாலாஸ் துதி, நேரம்: மாலை 6:30 மணி முதல் 8:30 மணி வரை. இடம்: அருணகிரிநாதர் அரங்கம், குமரன் குன்றம், குரோம்பேட்டை. தொடர்புக்கு: 97106 43967.
ஸ்ரீ ஆஸ்திக சேவா சமிதியின் 17ம் ஆண்டு மஹோத்சவம் மற்றும் உலக நன்மைக்காக காலை 6:00 முதல் நண்பகல் 12:00 மணி வரை, கணபதி ஹோமம் மற்றும் அதிருத்ர மஹாயக்ஞம், மாலை ஸ்ரீ ருத்ரக்ரமார்ச்சனை, இரவு 7:00 மணிக்கு ஸ்ரீமத் பாகவத உபன்யாசம். இடம்: அயோத்யா அஸ்வமேத மஹா மண்டபம், மேற்கு மாம்பலம், சென்னை 600 033.
சங்கடஹர சதுர்த்தி
அபிஷேக அலங்கார ஆராதனை. மாலை 6:00 மணி. இடம்: ரத்தின விநாயகர் கோவில், ஒயிட்ஸ் ரோடு, ராயப்பேட்டை.
சங்கடஹர சதுர்த்தி
அபிஷேகம் -மாலை 6:30 மணி. இடம்: சுந்தர விநாயகர் கோவில், மெயின் ரோடு, பள்ளிக்கரணை.
கல்யாண பசுபதீஸ்வரர் கோவில்
கும்பாபிேஷகத்தை முன்னிட்டு மண்டல பூஜை, அபிேஷகம் - காலை 6:00 மணி. மண்டல பூஜை - மாலை 6:00 மணி.
இடம்: அரசன்கழனி, ஒட்டியம்பாக்கம்.
பொது
யோகா பயிற்சி
இலவச யோகா பயிற்சி சத்யானந்தா யோக மையம் சார்பில் இலவச யோகா வகுப்பு காலை 5:30 முதல் 7:00 மணி வரை. இடம்: திருவீதி அம்மன் கோவில், வேளச்சேரி. தொடர்புக்கு: 87544 99334
யோகா பயிற்சி
சத்யானந்தா யோக மையம் சார்பில் இலவச யோகா வகுப்பு. காலை 5:30 முதல் 7:00 மணி வரை. இடம்: பி2, லட்சுமி நகர், பிரதான சாலை, நங்கநல்லுார். தொடர்புக்கு: 98412 27709, 94450 51015
தமிழ்நாடு முஸ்லிம் தொண்டு இயக்கம் சார்பில் இலவச திருமணம். நேரம் 10:00 மணி. இடம்: எச்.பி.எம்., மஹால், அம்பத்துார், சென்னை - 58. தொடர்புக்கு: 94441 65153.
நாம சங்கீர்த்தன உற்சவம்
பாராயணம், பாதுகா பூஜை, தேவாரம், திருப்புகழ், அபங்க சங்கீர்த்தனம், பிற்பகல் 3:00 முதல் இரவு 10:00 மணி வரை. இடம்: கணேஷ் மண்டி, வரசித்தி விநாயகர் கோவில், நங்கநல்லுார்.
கால்பந்து போட்டி
டி.ஏ.வி., - எஸ்.எம்.கே., பாம்ரா கல்லுாரி சார்பில் பள்ளிகளுக்கு இடையேயான கால்பந்து போட்டிகள் - காலை 8:00 முதல் மாலை 5:00 வரை. இடம்: கல்லுாரி வளாகம், கேளம்பாக்கம்.
தொடர்புக்கு: 98418 11554