/உள்ளூர் செய்திகள்/சென்னை/ டி.என்.சி.ஏ., 'லீக்' கிரிக்கெட் கோரமண்டல் அணி அபாரம் டி.என்.சி.ஏ., 'லீக்' கிரிக்கெட் கோரமண்டல் அணி அபாரம்
டி.என்.சி.ஏ., 'லீக்' கிரிக்கெட் கோரமண்டல் அணி அபாரம்
டி.என்.சி.ஏ., 'லீக்' கிரிக்கெட் கோரமண்டல் அணி அபாரம்
டி.என்.சி.ஏ., 'லீக்' கிரிக்கெட் கோரமண்டல் அணி அபாரம்
ADDED : ஜூன் 16, 2024 12:30 AM

சென்னை, டி.என்.சி.ஏ., எனப்படும் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் 2023 -- 24க்கான மாநில அளவிலான லீக் கிரிக்கெட் சாம்பியன்ஷிப் போட்டிகள், தமிழகத்தின் பல இடங்களில் நடந்து வருகின்றன.
இதில், தமிழகத்தில் இயங்கிவரும் பல்வேறு அமைப்புகள், நிறுவனங்கள், கிரிக்கெட் குழுக்களின் அணிகள், பகுதி மற்றும் மண்டலம் வாரியாக பங்கேற்று, பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. போட்டிகள் 50 ஓவர் அடிப்படையில் நடக்கின்றன.
டிவிஷன் 2ல் இடம் பெற்றுள்ள கோரமண்டல் அணியும், எம்.சி.சி., அணியும் மோதிய போட்டியில், முதலில் களமிறங்கிய கோரமண்டல் அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 309 ரன்களை குவித்தது.
மயாங்க் ரவாத் ஆட்டமிழக்காது 130 ரன்களும், பிரசாந்த் பண்டாரி 103 ரன்களும் குவித்தனர்.
அடுத்து களமிறங்கிய எம்.சி.சி., அணிக்கு கவுரவ், பரத் முறையே 54 மற்றும் 53 ரன்கள் எடுத்து நம்பிக்கையூட்ட, மற்றவர்கள் ரன் எடுக்கத் திணறினர்.
மொத்தம் 50 ஓவர் முடிவில் எம்.சி.சி., அணி ஆறு விக்கெட் இழந்து 219 ரன்கள் எடுத்தது. இதனால், கோரமண்டல் அணி 90 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இதே பிரிவில் நடந்த மற்றொரு போட்டியில் இந்தியன் வங்கி அணி, 58 ரன் வித்தியாசத்தில் எஸ்.கே.எம்., அணியை வீழ்த்தியது. போட்டிகள் தொடர்ந்து நடக்கின்றன.