/உள்ளூர் செய்திகள்/சென்னை/ கேஸ் கசிவால் தீப்பிடித்ததில் சிகிச்சை பெற்று வந்த மூவர் உயிரிழப்பு கேஸ் கசிவால் தீப்பிடித்ததில் சிகிச்சை பெற்று வந்த மூவர் உயிரிழப்பு
கேஸ் கசிவால் தீப்பிடித்ததில் சிகிச்சை பெற்று வந்த மூவர் உயிரிழப்பு
கேஸ் கசிவால் தீப்பிடித்ததில் சிகிச்சை பெற்று வந்த மூவர் உயிரிழப்பு
கேஸ் கசிவால் தீப்பிடித்ததில் சிகிச்சை பெற்று வந்த மூவர் உயிரிழப்பு
ADDED : மார் 11, 2025 07:27 PM
கோவிலம்பாக்கம்:கோவிலம்பாக்கம், காந்தி நகரைச் சேர்ந்தவர் முனுசாமி, 75. இவரது மனைவி ராணி, 70, மகள் சாந்தி, 45, மருமகன் ரகு, 48, பேரன் அஜித்குமார், 27, ஆகியோர், ஒரே வீட்டில் வசித்தனர்.
கடந்த 5ம் தேதி, காஸ் கசிவால் தீ விபத்து ஏற்பட்டு, வீடு முழுதும் எரிந்தது. இதில் வீட்டில் இருந்த முனுசாமி, ராணி, சாந்தி, அஜித்குமார் ஆகியோருக்கு, பலத்த தீக்காயம் ஏற்பட்டது. ரகுவிற்கு சிறிய அளவில் மட்டுமே காயம் ஏற்பட்டது.
குரோம்பேட்டையில் முதலுதவி பெற்று, மேல் சிகிச்சைகாக, கே.எம்.சி., அரசு மருத்துவமனையில், நான்கு பேரும் அனுமதிக்கப்பட்டனர்.
இந்நிலையில், முனுசாமி, சாந்தி, அஜித்குமார் ஆகியோர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். ராணி, தீவிர சிகிச்சையில் உள்ளார். மேடவாக்கம் போலீசார் விசாரிக்கின்றனர்.