/உள்ளூர் செய்திகள்/சென்னை/ அண்ணன், நண்பரை மது குடிக்க அழைத்து வெட்டிய தம்பி அண்ணன், நண்பரை மது குடிக்க அழைத்து வெட்டிய தம்பி
அண்ணன், நண்பரை மது குடிக்க அழைத்து வெட்டிய தம்பி
அண்ணன், நண்பரை மது குடிக்க அழைத்து வெட்டிய தம்பி
அண்ணன், நண்பரை மது குடிக்க அழைத்து வெட்டிய தம்பி
ADDED : ஜூன் 02, 2024 12:24 AM
எழும்பூர், சென்னை, திருவல்லிக்கேணி பகுதியைச் சேர்ந்தவர்கள் அரவிந்தன், 23. இவரும், நண்பர்கள், இளவரசு, 24, ராஜேஷ், 23, உட்பட நான்கு பேரும், நேற்று மதியம் ஆல்பர்ட் தியேட்டர் அருகில் உள்ள டாஸ்மாக் கடையில் மது அருந்தினர்.
போதை அதிகமானதும் அரவிந்தன், தன் சகோதரர் அஜித்குமார், 25 மற்றும் அவரது நண்பர் நடுக்குப்பத்தைச் சேர்ந்த சோமு,22, ஆகியோரை மது குடிக்க அழைத்துள்ளார்.
அங்கு அஜித்குமார், சோமு ஆகியோர் வந்தனர். அப்போது அளவுக்கதிகமான போதையில் இருந்த அரவிந்தன் மற்றும் அவரது நண்பர்கள் நான்கு பேரும், மறைத்து வைத்திருந்த கத்தியால் திடீரென அஜித்குமார், சோமுவை திடீரென சரமாரியாக வெட்டிவிட்டு, தப்பினர்.
இதில் அஜித்குமார், சோமு ஆகியோருக்கு தலையில் பலத்த வெட்டுக்காயம் விழுந்தது. தகவல் கிடைத்து எழும்பூர் போலீசார் அங்கு வந்து இருவரையும் மீட்டு அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
போலீசார் வழக்கு பதிவு செய்து, அரவிந்தன் உள்ளிட்ட நான்கு பேரை தேடி வருகின்றனர்.