/உள்ளூர் செய்திகள்/சென்னை/ கணவர் இறக்கும் முன் மனைவியும் தற்கொலை கணவர் இறக்கும் முன் மனைவியும் தற்கொலை
கணவர் இறக்கும் முன் மனைவியும் தற்கொலை
கணவர் இறக்கும் முன் மனைவியும் தற்கொலை
கணவர் இறக்கும் முன் மனைவியும் தற்கொலை
ADDED : ஜூன் 28, 2024 12:17 AM

புழல், சென்னை, புழல் அடுத்த விநாயகபுரம், அன்னை பராசக்தி நகரைச் சேர்ந்தவர் ஞானசெல்வம், 59; இந்தியன் ஆயில் நிறுவன மேலாளர்.
அவரது வீட்டில், நேற்று காலை முதல் துர்நாற்றம் வீசிய நிலையில், நாயும் குரைத்துள்ளது. அருகில் வசிப்போர் புழல் போலீசாருக்கு தகவல் கூறினர்.
போலீசார் வந்து, உள்பக்கம் தாழிடப்பட்ட கதவை உடைத்து பார்த்த போது, அழுகிய நிலையில் படுக்கையில் ஆண் உடலும், அருகே துாக்கிட்ட நிலையில் பெண் உடலும் இருந்தன. போலீசார், அங்கிருந்தோரிடம் விசாரித்தனர்.
அதில், இறந்தது ஞானசெல்வம், அவரது மனைவி எஸ்தர் சரோஜினி, 55, என தெரிந்தது.
காதல் திருமணம் செய்து கொண்ட இவர்களுக்கு, பிள்ளைகள் இல்லாததால், தங்களுக்கு சொந்தமான பெரிய வீட்டில், துணையாக நாட்டு இன நாய் ஒன்றை வளர்த்துஉள்ளனர்.
புற்றுநோய் முற்றிய நிலையில் ஞானசெல்வம், வீட்டில் இருந்தபடி சிகிச்சை பெற்று வந்துள்ளார்.
நான்கு நாட்களுக்கு முன், உடல் நிலை மிகவும் மோசமாகி, கணவரை இழக்கும் நிலை ஏற்பட்டதால், எஸ்தர் சரோஜினி சோகமாக இருந்துள்ளார்.
கணவரை இழந்த பிறகு தனக்கு வாழ்க்கை இல்லை என நினைத்த அவர், கணவரை பார்த்தபடி மின் விசிறியில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது, போலீசாரின் விசாரணையில் தெரிந்தது.
நேற்று காலை, தகவல் அறிந்து, அவர்களது உறவினர்கள் வந்தனர்.
அழுகிய உடல்களை, புழல் போலீசார் மீட்டு, ஸ்டான்லி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
தம்பதி வளர்த்த நாய், வீட்டில் இருந்து வெளியே செல்லாமல், ஓயாமல் குரைத்துக் கொண்டிருந்தது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.