/உள்ளூர் செய்திகள்/சென்னை/ வழக்கில் சிக்கிய வாகனங்கள் நடைபாதையில் 'பார்க்கிங்' வழக்கில் சிக்கிய வாகனங்கள் நடைபாதையில் 'பார்க்கிங்'
வழக்கில் சிக்கிய வாகனங்கள் நடைபாதையில் 'பார்க்கிங்'
வழக்கில் சிக்கிய வாகனங்கள் நடைபாதையில் 'பார்க்கிங்'
வழக்கில் சிக்கிய வாகனங்கள் நடைபாதையில் 'பார்க்கிங்'
ADDED : ஜூன் 21, 2024 12:16 AM

கே.கே.நகர், கே.கே.நகர், சிவன் பூங்கா அருகே உள்ள நடைபாதையை ஆக்கிரமித்து, இருசக்கர வாகனம் மற்றும் ஆட்டோக்கள் நிறுத்தப்படுவதால், பாதசாரிகள் அவதிப்படுகின்றனர்.
சென்னை, கோடம்பாக்கம் மண்டலம், 136வது வார்டு, கே.கே.நகர், பி.டி.ராஜன் சாலையில், சிவன் பூங்கா உள்ளது. இந்த பூங்காவின் சுற்றுச்சுவரை ஒட்டி, நடைபாதை அமைக்கப்பட்டு உள்ளது.
இங்கு, வழக்குகளில் சம்பந்தப்பட்ட இருசக்கர வாகனங்கள் மற்றும் ஆட்டோக்கள், கே.கே.நகர் காவல் நிலைய போலீசாரால் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன. இந்த வாகனங்கள், காவல் நிலையம் முன் உள்ள மிதிவண்டி பாதையில், ஏற்கனவே நிறுத்தப்பட்டிருந்தன.
இதுகுறித்து எழுந்த புகாரையடுத்து, காவல் நிலையம் எதிரே உள்ள நடைபாதையில், தற்போது நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன.
இதனால், பாதசாரிகள் நடைபாதையை பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. காலை மற்றும் மாலையில், சிவன் பூங்காவிற்கு குழந்தைகளுடன் வரும் பொதுமக்கள், நடைபாதையில் செல்ல முடியாமல், சாலையில் இறங்கி நடந்து செல்கின்றனர்.
எனவே, நடைபாதையை ஆக்கிரமித்து நிறுத்தி வைக்கப்பட்டு உள்ள வாகனங்களை அகற்ற, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை வலுத்துள்ளது.