/உள்ளூர் செய்திகள்/சென்னை/ மதுபாட்டில் வைத்திருந்த வாலிபர் சிக்கினார் மதுபாட்டில் வைத்திருந்த வாலிபர் சிக்கினார்
மதுபாட்டில் வைத்திருந்த வாலிபர் சிக்கினார்
மதுபாட்டில் வைத்திருந்த வாலிபர் சிக்கினார்
மதுபாட்டில் வைத்திருந்த வாலிபர் சிக்கினார்
ADDED : ஜூலை 27, 2024 12:19 AM
எழும்பூர், எழும்பூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் நரசிம்மன் நேற்று முன்தினம் இரவு, மேற்கு கூவம் சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டார்.
அப்போது வாலிபர் ஒருவர், கையில் சாக்கு பையுடன் சந்தேகத்திற்கு இடமாக நடந்து சென்றுள்ளார். அவரை மடக்கி விசாரித்த போது, முன்னுக்குப் பின் முரணாக பதில் கூறியுள்ளார்.
அவரது சாக்கு பையை சோதனை செய்த போது, 25 குவார்ட்டர் மதுபாட்டில்கள் இருந்துள்ளன.
காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரித்ததில் அவர், சிந்தாதிரிப்பேட்டையைச் சேர்ந்த ஹரிஹரன், 19, என தெரிந்தது. அவர் மீது வழக்கு பதிவு செய்த போலீசார், காவல் நிலைய ஜாமினில் விடுவித்தனர்.