ADDED : ஜூன் 07, 2024 12:32 AM
அம்பத்துார், சென்னை கொளத்துார் அடுத்த ராஜமங்கலத்தை சேர்ந்தவர் யோகலட்சுமி, 19. அவர், சென்னை எத்திராஜ் கல்லுாரியில் படித்து வந்தார்.
நேற்று முன் தினம் தோழியை சந்திக்க, நண்பர் விஷால் என்பவருடன், 'ஸ்பிளண்டர்' ரக இரு சக்கர வாகனத்தில், அம்பத்துாருக்கு சென்றார்.
அப்போது அம்பத்துார் பட்டரவாக்கம் இணைப்பு சாலையில், எதிர் திசையில் வந்த 'பல்சர்' பைக், இவர்களது பைக்கில் மோதியது. மூவரும் நிலைதடுமாறி விழுந்தனர். இவர்கள் கீழ்பாக்கம் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர் அதில், யோகலட்சுமி உயிரிழந்தார்.