/உள்ளூர் செய்திகள்/சென்னை/ பீடி தராத ஆத்திரத்தால் தந்தையை கொன்ற மகன் பீடி தராத ஆத்திரத்தால் தந்தையை கொன்ற மகன்
பீடி தராத ஆத்திரத்தால் தந்தையை கொன்ற மகன்
பீடி தராத ஆத்திரத்தால் தந்தையை கொன்ற மகன்
பீடி தராத ஆத்திரத்தால் தந்தையை கொன்ற மகன்
ADDED : ஜூன் 19, 2024 12:13 AM

அம்பத்துார், அம்பத்துார், எம்.கே.பி., நகரைச் சேர்ந்தவர் மகேந்திரன், 55; தொழிலாளி. அவரது மகன் அருண், 28; மனநலம் பாதிக்கப்பட்டவர்.
நேற்று முன்தினம் மாலை, வீட்டு வாசலில் அமர்ந்து, மகேந்திரன் புகை பிடித்துக்கொண்டிருந்தார். அவரிடம் சென்ற அருண், தனக்கு ஒரு பீடி வேண்டும் என கேட்டுள்ளார். அதற்கு மகேந்திரன், பீடி தருவதற்கு மறுத்து உள்ளார்.
அதனால், இருவருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம், கைகலப்பானது. இதில் ஆத்திரமடைந்த அருண், அங்கு கிடந்த தட்டையான கருங்கல் எடுத்து, தந்தையின் தலையில், ஆவேசமாக தாக்கினார்.
மகேந்திரன், ரத்த வெள்ளத்தில் மயங்கி கீழே விழுந்தார். எனினும், ஆத்திரம் தீராததால், அந்த கல்லை அவரது தலையில் வேகமாக போட்டார். இதையடுத்து, சம்பவ இடத்திலே மகேந்திரன் உயிரிழந்தார்.
இதுகுறித்து தகவலறிந்த அம்பத்துார் போலீசார், அருணை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.