/உள்ளூர் செய்திகள்/சென்னை/ மாடு முட்டி காயமடைந்த பெண்ணின் உறவினர்கள் முற்றுகை போராட்டம் மாடு முட்டி காயமடைந்த பெண்ணின் உறவினர்கள் முற்றுகை போராட்டம்
மாடு முட்டி காயமடைந்த பெண்ணின் உறவினர்கள் முற்றுகை போராட்டம்
மாடு முட்டி காயமடைந்த பெண்ணின் உறவினர்கள் முற்றுகை போராட்டம்
மாடு முட்டி காயமடைந்த பெண்ணின் உறவினர்கள் முற்றுகை போராட்டம்
ADDED : ஜூன் 19, 2024 12:16 AM

திருவொற்றியூர், திருவொற்றியூரில் மாடு முட்டி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பெண்ணின் உறவினர்கள், திருவொற்றியூர் மண்டல அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
சென்னை, திருவொற்றியூர், அம்சா தோட்டம் பகுதியைச் சேர்ந்த மதுமதி, 33 என்ற பெண், கடந்த 16ம் தேதி சோமசுந்தரம் நகர் சந்திப்பில் நடந்து சென்றார்.
அப்போது, தறிகெட்டு ஓடி வந்த எருமை மாடு, அவரை முட்டி தரதரவென்று இழுத்துச் சென்றது. மதுமதியை காப்பாற்ற முயன்ற இருவரையும் எருமை மாடு முட்டி தள்ளியது.
இந்த சம்பவத்தில், மதுமதிக்கு கை, இடுப்பு, தோள்பட்டை, தொடை பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டது. தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட மதுமதிக்கு, 20 தையல்கள் போடப்பட்டு, தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளார்.
இந்நிலையில், மதுமதியின் உறவினர்கள் திருவொற்றியூர் மண்டல அலுவலகத்தின் முன் நேற்று திடீரென திரண்டனர். பின் அங்கேயே அமர்ந்து முற்றுகையிட்டு கோஷங்களை எழுப்பினர்.
'மதுமதியை இதுவரை அதிகாரிகளோ, ஆளும் கட்சியினரோ நேரில் வந்து பார்க்கவில்லை. மாட்டின் உரிமையாளர் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை' என அவர்கள் குற்றம்சாட்டினர்.
மண்டலக் குழு தலைவர் தனியரசு, போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு நடத்தினார். ' மதுமதியின் மருத்துவ செலவிற்கு ஒரு லட்ச ரூபாய்க்கு அதிகமாக செலவாகி உள்ளது. மாடு முட்டிய சம்பவத்திற்கு மாநகராட்சி பொறுப்பேற்று மருத்துவ செலவை முழுவதையும் ஏற்க வேண்டும்.
அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று உரிய நிவாரணம் வழங்க வேண்டும்' என, பெண்ணின் உறவினர்கள் கோரிக்கை வைத்தனர்.
மாடு முட்டி காயமடைந்த பெண்ணின் மருத்துவசெலவு அனைத்தையும் ஏற்பதாக தனியரசு உறுதி அளித்ததை அடுத்து, உறவினர்கள் கலைந்து சென்றனர்.