ADDED : ஜூன் 26, 2024 12:28 AM

புழல், சென்னை புழல் அடுத்த விநாயகபுரம் தனியார் அடுக்குமாடி குடியிருப்பைச் சேர்ந்தவர் வெங்கடேஷ், 38. இவர், கடந்த மாதம் குடும்பத்தினருடன், சென்னைக்கு சென்றார்.
மறுநாள் வீட்டிற்கு வந்த போது, அவரது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு, 2 கிலோ வெள்ளி பொருட்கள் மற்றும் அவரது 'ஹோண்டா ஆக்டிவா' இருசக்கர வாகனம் ஆகியவை திருடு போனது தெரியவந்தது.
புழல் போலீசாரின் வாகன சோதனையில், வெங்கடேஷ் வீட்டில் திருடிய கொட்டிவாக்கம், இ.சி.ஆர்., சாலையைச் சேர்ந்த ரமேஷ், 32, என்பவர் சிக்கினார். அவரை கைது செய்த போலீசார், இருசக்கர வாகனம், 2 கிலோ வெள்ளி பொருட்களை பறிமுதல் செய்தனர்.