/உள்ளூர் செய்திகள்/சென்னை/ துப்பாக்கி கத்தியுடன் 'ரீல்ஸ்' பதிவிட்டவர் கைது துப்பாக்கி கத்தியுடன் 'ரீல்ஸ்' பதிவிட்டவர் கைது
துப்பாக்கி கத்தியுடன் 'ரீல்ஸ்' பதிவிட்டவர் கைது
துப்பாக்கி கத்தியுடன் 'ரீல்ஸ்' பதிவிட்டவர் கைது
துப்பாக்கி கத்தியுடன் 'ரீல்ஸ்' பதிவிட்டவர் கைது
ADDED : ஜூன் 22, 2024 12:27 AM

வியாசர்பாடி, சமூக வலைதளங்களில் மர்ம நபர்கள், பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில், துப்பாக்கி மற்றும் கத்தியுடன், 'ரீல்ஸ்' பதிவிடுவதாக, வியாசர்பாடி போலீசாருக்கு நேற்று ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து வியாசர்பாடி போலீசார், சம்பந்தப்பட்ட இன்ஸ்டாகிராம் முகவரியை சோதனையிட்ட போது, அதில் மர்ம நபர் ஒருவர், 'டம்மி' கத்தி மற்றும் துப்பாக்கியுடன் ரீல்ஸ் வெளியிட்டது தெரிந்தது.
இதையடுத்து வியாசர்பாடி போலீசார் வழக்கு பதிந்து, சம்பவத்தில் ஈடுபட்ட வியாசர்பாடி, கென்னடி நகர் மூன்றாவது தெருவை சேர்ந்த சஞ்சய், 22, என்பவரை கைது செய்து, அவரிடம் இருந்த மரத்தால் செய்யப்பட்ட இரு கத்தி மற்றும் பிளாஸ்டிக் துப்பாக்கியை பறிமுதல் செய்தனர்.