/உள்ளூர் செய்திகள்/சென்னை/ தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து சிறுமி பலி தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து சிறுமி பலி
தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து சிறுமி பலி
தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து சிறுமி பலி
தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து சிறுமி பலி
ADDED : ஜூன் 17, 2024 02:02 AM

ஏழுகிணறு:ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்தவர் கிருஷ்ணன், 30. இவரது மனைவி தட்சணா, 25. இவர்களது குழந்தைகள் ரிஷி, 7, ஸ்ருதி, 5. கட்டட வேலைக்காக சென்னை வந்த கிருஷ்ணன், குடும்பத்துடன் கொத்தவால்சாவடி, கோவிந்தப்பன் தெருவில் தங்கி உள்ளார்.
ஏழுகிணறு பகுதியில் உள்ள புது கட்டடத்தில், நேற்று வேலையில் ஈடுபட்டிருந்தார். அங்கு, விளையாடிக் கொண்டிருந்த மகள் ஸ்ருதி திடீரென மாயமானார்.
கட்டட வளாகத்தில் தேடி கிடைக்காததால், குழந்தையை தேடி தெருவில் வந்தார். அப்போது, அவ்வழியே வந்த போலீசாரிடம் தன் மகள் மாயமானது குறித்து தெரிவித்தார். இதையடுத்து, போலீசாரும் தேடிய நிலையில், கட்டடத்தின் தரைத்தளத்தில் அமைக்கப்பட்டு வந்த நீர்த்தேக்க தொட்டியில், சிறுமி மயங்கிய நிலையில் கிடப்பது தெரியவந்தது.
சிறுமியை மீட்ட போலீசார், ரோந்து வாகனத்தில் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு மருத்துவ பரிசோதனையில் சிறுமி இறந்தது தெரிய வந்தது. இது குறித்து ஏழுகிணறு போலீசார் விசாரிக்கின்றனர்.