/உள்ளூர் செய்திகள்/சென்னை/ கால்வாய் கான்கிரீட் கழிவு மனையில் கொட்டி அடாவடி கால்வாய் கான்கிரீட் கழிவு மனையில் கொட்டி அடாவடி
கால்வாய் கான்கிரீட் கழிவு மனையில் கொட்டி அடாவடி
கால்வாய் கான்கிரீட் கழிவு மனையில் கொட்டி அடாவடி
கால்வாய் கான்கிரீட் கழிவு மனையில் கொட்டி அடாவடி
ADDED : ஜூன் 17, 2024 01:53 AM

புழுதிவாக்கம்:பெருங்குடி மண்டலம், புழுதிவாக்கம், அன்னை தெரசா நகர், 18வது தெருவில், 10 கிரவுண்ட் காலி மனை உள்ளது. இப்பகுதியில், 300க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
ஆறு மாதங்களுக்கு முன், இப்பகுதியில் மழைநீர் கால்வாய் பணி நடந்தது. அப்போது, பழைய கால்வாய்களில் இருந்து பெயர்த்து எடுக்கப்பட்ட சிமென்ட் சட்டங்கள், கான்கிரீட் கழிவுகள், கால்வாய் கட்டுமான ஒப்பந்ததாரரால், இந்த காலி மனையில் கொட்டப்பட்டது.
தற்போது வரை அகற்றப்படாததால், கட்டட கழிவுகளின் இடுக்குகளில் விஷ ஐந்துக்கள் தங்கியுள்ளன. இங்கிருந்து, அருகில் வீடுகளுக்கு அடிக்கடி நுழைவதால், பகுதிவாசிகள் அவதிப்படுகின்றனர்.
காலி இடத்தை குப்பை கொட்டும் இடமாகவும் மக்கள் பயன்படுத்த துவங்கியிருப்பதால், கொசு உற்பத்தியாகி, சுகாதார சீர்கேடும் நிலவுகிறது.
காலி இடத்தின் உரிமையாளர் அல்லது கான்கிரீட் கழிவுகளை கொட்டிய ஒப்பந்ததாரர் கட்டட கழிவுகளை அகற்ற, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.