ADDED : ஜூன் 12, 2024 12:16 AM
கொருக்குப்பேட்டை, கொருக்குப்பேட்டை, ராமநாதபுரம் ஹவுசிங் போர்டை சேர்ந்த ஆட்டோ டிரைவர் பாபு, 35. இவரது மனைவி சுதா. இவர்களுக்கு 12 வயதில் திவாகர் என்ற மகனும், 6 மாத கைக்குழந்தையும் உள்ளது.
நேற்று குடும்பத்தினர் அனைவரும் வீட்டிற்கு வெளியே டீ குடித்தனர். அப்போது வீட்டில் தனியாக இருந்த திவாகர், குழந்தையின் தொட்டிலில் விளையாடி கொண்டிருந்தான்.
அப்போது, எதிர்பாராத விதமாக கழுத்து இறுகி இறந்துள்ளார். சிறிது நேரம் கழித்து பெற்றோர் உள்ளே சென்று பார்த்தபோது, சிறுவன் மயங்கிய நிலையில் இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
சிறுவன் திவாகரை மீட்டு ஸ்டான்லி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். கொருக்குப்பேட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.