/உள்ளூர் செய்திகள்/சென்னை/ டென்னிஸ் பால் கிரிக்கெட் லீக் சிறுவர் - சிறுமியருக்கு அழைப்பு டென்னிஸ் பால் கிரிக்கெட் லீக் சிறுவர் - சிறுமியருக்கு அழைப்பு
டென்னிஸ் பால் கிரிக்கெட் லீக் சிறுவர் - சிறுமியருக்கு அழைப்பு
டென்னிஸ் பால் கிரிக்கெட் லீக் சிறுவர் - சிறுமியருக்கு அழைப்பு
டென்னிஸ் பால் கிரிக்கெட் லீக் சிறுவர் - சிறுமியருக்கு அழைப்பு
ADDED : மார் 11, 2025 07:01 PM
சென்னை:தமிழ்நாடு டென்னிஸ் பால் கிரிக்கெட் சங்கம் ஆதரவில், சென்னை மாவட்ட டென்னிஸ் பால் கிரிக்கெட் சங்கம் சார்பில், சூப்பர் லீக் போட்டிகள், இம்மாதம் 23ம் தேதி நடக்கிறது.
போட்டிகள், விருகம்பாக்கத்தில் உள்ள ஆவிச்சி பள்ளி வளாகத்தில் நடக்க உள்ளன. இதில், 12, 14, 17 மற்றும் 19 வயதுக்கு உட்பட இருபாலர் அணிகளும் பங்கேற்றலாம்.
ஆறு ஓவர்கள் அடிப்படையில், 'லீக்' முறையில் போட்டிகள் நடக்கின்றன. மேலும், 17 வயது பிரிவினருக்கு மட்டும், சென்னை மாவட்ட அணியாக தேர்வு செய்து, ஏப்., 5, 6ம் தேதிகளில், கோவையில் நடக்க உள்ள மாநில போட்டியில் பங்கேற்க தகுதி பெறுவர்.
போட்டியில் பங்கேற்க விரும்புவோர், 94441 17854 என்ற எண்ணில், மாவட்ட செயலரை தொடர்பு கொள்ளலாம் என, போட்டியின் ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்தனர்.