/உள்ளூர் செய்திகள்/சென்னை/ நுாக்கம்பாளையம் சாலை பள்ளத்தில் விபத்தை தடுக்க தற்காலிக அடைப்பு நுாக்கம்பாளையம் சாலை பள்ளத்தில் விபத்தை தடுக்க தற்காலிக அடைப்பு
நுாக்கம்பாளையம் சாலை பள்ளத்தில் விபத்தை தடுக்க தற்காலிக அடைப்பு
நுாக்கம்பாளையம் சாலை பள்ளத்தில் விபத்தை தடுக்க தற்காலிக அடைப்பு
நுாக்கம்பாளையம் சாலை பள்ளத்தில் விபத்தை தடுக்க தற்காலிக அடைப்பு
UPDATED : மார் 12, 2025 03:23 AM
ADDED : மார் 11, 2025 07:11 PM
செம்மஞ்சேரி:ஓ.எம்.ஆர்., குமரன் நகரில் இருந்து, செம்மஞ்சேரி நோக்கி செல்லும் நுாக்கம்பாளையம் இணைப்பு சாலை, 80 அடி அகலம் கொண்டது.
இந்தச் சாலையில், ஒரு கி.மீ., துாரத்தில் தெற்கு திசையில் இருந்து வடக்கு திசை நோக்கி, மழைநீர் செல்லும் வகையில், ஐந்து இடங்களில் சாலையின் குறுக்கே மூடுகால்வாய் அமைக்கப்பட்டுள்ளது.
வடக்கு திசையில் தண்ணீர் வடிந்து செல்லும் பகுதி, சாலையை விட, எட்டு அடி பள்ளத்தில் உள்ளது.
தடுப்பு சுவர் இல்லாததால், அடிக்கடி விபத்து நடந்தது. கடந்த ஐந்து மாதங்களில் லாரி, பைக் என, பத்துக்கும் மேற்பட்ட வாகனங்கள் விபத்தில் சிக்கின. ஒரு வாலிபர் பலியானார். இதனால், விபத்தை தடுக்க தடுப்பு சுவர் கட்ட வேண்டும் என, கோரிக்கை எழுந்தது.
வடக்கு திசையில் உள்ள காலியிடம் தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் இருப்பதால், அரசு சார்பில் தடுப்பு சுவர் கட்டவில்லை.
இந்நிலையில், வெள்ளம் வடியும் பள்ளமாக உள்ள இடத்தில், தற்காலிக தடுப்பு அமைக்க மாநகராட்சி முடிவு செய்தது.
இதையடுத்து, ஐந்து இடங்களில் இரும்பு தகரம் வைத்து, சுற்றிலும் அடைக்கப்பட்டது. இதனால், விபத்து நடைபெறாது என்றும், பள்ளத்தில் விழுந்து ஏற்படும் உயிர் சேதம் தவிர்க்கப்படும் எனவும், அதிகாரிகள் கூறினர்.