கன்டெய்னர் மோதி வாலிபர் உயிரிழப்பு
கன்டெய்னர் மோதி வாலிபர் உயிரிழப்பு
கன்டெய்னர் மோதி வாலிபர் உயிரிழப்பு
ADDED : ஜூன் 08, 2024 12:22 AM

மணலி, மணலி, கொசப்பூர், தியாகி விஸ்வநாத தாஸ் நகரைச் சேர்ந்தவர் கவுதம், 24; எம்.பி.ஏ., பட்டதாரி. இவர், மயிலாப்பூரில் உள்ள தனியார் வங்கி காப்பீட்டு நிறுவனத்தில் பணி புரிந்தார்.
நேற்று முன்தினம் இரவு, வேலை முடித்து தன் 'பஜாஜ் பல்சர்' பைக்கில், வீடு திரும்பினார். மாதவரம், 200 அடி சாலை, மஞ்சம்பாக்கம் சந்திப்பு அருகே வந்தபோது, கன்டெய்னர் லாரியின் பக்கவாட்டில் இருக்கும் கைப்பிடி இடித்து, கவுதம் நிலைதடுமாறி கீழே விழுந்தார்.
கண்ணிமைக்கும் நேரத்தில், லாரியின் பின்பக்க டயர் வயிற்றில் ஏறி இறங்கியதில், அவர் பலத்த காயமடைந்தார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு, ஸ்டான்லி அரசு மருத்துமனையில் சேர்த்தனர்.
அங்கு, அதிகாலையில் கவுதம் உயிரிழந்தார். செங்குன்றம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார், விபத்து ஏற்படுத்திய கன்டெய்னர் லாரி ஓட்டுனரான, ராமநாதபுரம், கமுதியைச் சேர்ந்த முத்துராமலிங்கம், 49, என்பவரை, கைது செய்து விசாரிக்கின்றனர்.