/உள்ளூர் செய்திகள்/சென்னை/ '50 பிளஸ்' வீரர்களுக்கு 'டி - 20' கிரிக்கெட் '50 பிளஸ்' வீரர்களுக்கு 'டி - 20' கிரிக்கெட்
'50 பிளஸ்' வீரர்களுக்கு 'டி - 20' கிரிக்கெட்
'50 பிளஸ்' வீரர்களுக்கு 'டி - 20' கிரிக்கெட்
'50 பிளஸ்' வீரர்களுக்கு 'டி - 20' கிரிக்கெட்
ADDED : ஜூலை 07, 2024 12:17 AM
சென்னை, தமிழ்நாடு கிரிக்கெட் வெட்ரன்ஸ் சங்கம் சார்பில், டி.எஸ்.மகாலிங்கம் கோப்பைக்கான 'டி - 20' கிரிக்கெட் போட்டி நடக்க உள்ளது. வரும் 13ம் தேதி தரமணியில் உள்ள சுமங்கலி விளையாட்டு மைதானத்தில் போட்டிகள் துவங்குகின்றன.
ஐம்பது வயதிற்கும் மேற்பட்டோருக்கான இப்போட்டியில், கிளப், அகாடமி உள்ளிட்ட மொத்தம், 10 அணிகள் பங்கேற்கின்றன. போட்டிகள், 'லீக்' மற்றும் 'நாக் அவுட்' முறையில் நடக்க உள்ளன. முதற்கட்டமாக, 13ம் தேதி துவங்கும் இப்போட்டியில், 15 லீக் போட்டிகள் நடக்கின்றன.
அதைத்தொடர்ந்து 28ம் தேதி இறுதிப்போட்டி நடக்கிறது எ ன, தமிழ்நாடு கிரிக்கெட் வெட்ரன்ஸ் சங்கம் தெரிவித்துள்ளது.