/உள்ளூர் செய்திகள்/சென்னை/ மாநில நீச்சல் சங்க நிர்வாகிகள் தேர்வு மாநில நீச்சல் சங்க நிர்வாகிகள் தேர்வு
மாநில நீச்சல் சங்க நிர்வாகிகள் தேர்வு
மாநில நீச்சல் சங்க நிர்வாகிகள் தேர்வு
மாநில நீச்சல் சங்க நிர்வாகிகள் தேர்வு
ADDED : ஜூலை 12, 2024 12:24 AM
சென்னை, தமிழ்நாடு மாநில நீச்சல் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம், இந்திய நீச்சல் சம்மேளனத்தின் தலைவர் ஜெயப்பிரகாஷ் முன்னிலையில் நடந்தது. கூட்டத்தில், அடுத்த நான்கு ஆண்டுகளுக்கான புதிய நிர்வாகிகள் தேர்தல் நடத்தப்பட்டது.
அதில், சங்கத்தின் புதிய தலைவராக திருநெல்வேலியைச் சேர்ந்த திருமாறன் தேர்வு செய்யப்பட்டார். தற்போதைய செயலரான சென்னையைச் சேர்ந்த சந்திரசேகரன், பொருளாளரான முரளிதரன் இருவரும், மீண்டும் அதே பொறுப்புகளில் தேர்வாகினர்.
துணைத் தலைவராக சென்னையை சேர்ந்த முனியாண்டி, இணை செயலராக மதுரையைச் சேர்ந்த கண்ணன், சென்னையைச் சேர்ந்த இளங்கோவன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.
இக்கூட்டத்தில், தமிழகத்தின் நீச்சல் விளையாட்டை மேம்படுத்தும் வகையில் பள்ளி, கல்லுாரி உள்ளிட்ட அனைத்து தரப்பிலும் பயிற்சி அளித்து, பல்வித போட்டிகளை நடத்தி வீரர் - வீராங்கனையரை உருவாக்குவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.