/உள்ளூர் செய்திகள்/சென்னை/ காலி நிலத்தில் மழைநீர் தேக்கம் காட்டுப்பாக்கத்தில் சுகாதார சீர்கேடு காலி நிலத்தில் மழைநீர் தேக்கம் காட்டுப்பாக்கத்தில் சுகாதார சீர்கேடு
காலி நிலத்தில் மழைநீர் தேக்கம் காட்டுப்பாக்கத்தில் சுகாதார சீர்கேடு
காலி நிலத்தில் மழைநீர் தேக்கம் காட்டுப்பாக்கத்தில் சுகாதார சீர்கேடு
காலி நிலத்தில் மழைநீர் தேக்கம் காட்டுப்பாக்கத்தில் சுகாதார சீர்கேடு
ADDED : ஜூலை 09, 2024 12:33 AM

பூந்தமல்லி, காட்டுப்பாக்கம் ஊராட்சியில், காலி நிலங்களில் பல இடங்களில், மழைநீர் குட்டை போல் தேங்கி நிற்பதால், சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது.
பூந்தமல்லி ஒன்றியத்தில் காட்டுப்பாக்கம் ஊராட்சி அமைந்துள்ளது. இங்கு கோபரசநல்லுார், செந்துாரபுரம், அம்மன் நகர், விஜயலஷ்மி நகர், விநாயகபுரம், ராயல் நகர், காட்டுப்பாக்கம் ஆகிய பகுதிகளில், 15,000த்துக்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர்.
இந்த நகர்ப் பகுதியில் குடியிருப்புகள் மத்தியில், ஆங்காங்கே காலி நிலங்கள் உள்ளன. அண்மையில் பெய்த கன மழையால், இந்த நிலங்களில் நுாற்றுக்கும் மேற்பட்ட இடங்களில் குட்டை போல் தண்ணீர் தேங்கி நிற்கிறது.
இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது:
காட்டுப்பாக்கம் ஊராட்சி சென்னையின் புறநகரில் அமைந்துள்ளதால், இங்கு குடியிருப்புகளின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது.
இதற்கேற்ப அடிப்படை வசதிகள் இல்லை. குறிப்பாக, மழைநீர் வடிகால்வாய் குடியிருப்பு பகுதியில் போதிய அளவில் இல்லாததால், காலி நிலத்தில் தண்ணீர் தேங்கி சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது.
இந்த தண்ணீர் வடிவதற்கு நீண்ட நாட்களாவதால், கொசு உற்பத்தியாகிறது. மேலும், நீர்வாழ் உயிரினங்கள் பெருகி, இவற்றை பிடிக்க பாம்புகள் வருவதால், பகுதிவாசிகள் அச்சமடைகிறோம்.
போதிய மழைநீர் வடிகால்வாய் அமைத்து, காலி நிலத்தில் தண்ணீர் தேங்காமல் இருக்க, ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.