/உள்ளூர் செய்திகள்/சென்னை/ தென்மாநில கபடி எஸ்.ஆர்.எம்., 'கில்லி' தென்மாநில கபடி எஸ்.ஆர்.எம்., 'கில்லி'
தென்மாநில கபடி எஸ்.ஆர்.எம்., 'கில்லி'
தென்மாநில கபடி எஸ்.ஆர்.எம்., 'கில்லி'
தென்மாநில கபடி எஸ்.ஆர்.எம்., 'கில்லி'
ADDED : ஜூலை 11, 2024 12:39 AM

சென்னை, ஏ.எம்.சி., கபடி கிளப் சார்பில், தென்மாநில கபடி போட்டி, திருவாரூர் மாவட்டம், வடவூரில் 8ல் துவங்கி நேற்று முன்தினம் நிறைவடைந்தது.
தமிழகம், கேரளா உட்பட தென்மாநில அளவில், 40க்கு மேற்பட்ட அணிகள், 'லீக்' மற்றும் 'நாக் அவுட்' முறையில் மோதின.
லீக் சுற்றில், சென்னை எஸ்.ஆர்.எம்., கல்லுாரி, 37 - 16 என்ற கணக்கில் கேரளா ஜே.கே., அகடாமியையும், 40 - 17 என்ற கணக்கில் சென்னை நியூ கல்லுாரியையும் தோற்கடித்தது.
தொடர்ந்து நடந்த காலிறுதியில், எஸ்.ஆர்.எம்., அணி, 42 - 26 என்ற புள்ளிக்கணக்கில் தமிழக போலீஸ் அணியை வீழ்த்தி, அரையிறுதியில் 33 - 29 என்ற கணக்கில் வடவூர் புதுகை அணியையும் தோற்கடித்தது.
இறுதிப் போட்டியில், எஸ்.ஆர்.எம்., - கன்னியாகுமரி அழதங்கரை அணிகள் மோதின. அதில், 33 - 23 என்ற கணக்கில் எஸ்.ஆர்.எம்., அணி வெற்றி பெற்று, தங்கம் வென்றது.
தொடர்ந்து, மூன்றாம் இடத்தை, தஞ்சாவூர் பிரிஷ்ட் பல்கலையும், நான்காம் இடத்தை திருவாரூர் புதுகை அணியும் கைப்பற்றின.