நுாம்பல் சாலையும் விபத்து அபாயமும்
நுாம்பல் சாலையும் விபத்து அபாயமும்
நுாம்பல் சாலையும் விபத்து அபாயமும்
ADDED : ஜூலை 11, 2024 12:37 AM

திருவேற்காடு நகராட்சிக்கு உட்பட்ட நுாம்பல் பிரதான சாலை, 1.5 கி.மீ., துாரம் உடையது. இங்கு, பல்வேறு தொழில்துறை நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன.
பல ஆண்டுகளாக சீரமைக்கப்படாததால், போக்குவரத்திற்கு லாயக்கற்ற நிலையில் சாலை படுமோசமாக உள்ளது.
இதனால், வாகனங்களும் கவிழ்ந்து விபத்தில் சிக்கும் நிலை உள்ளது. இதனால், பீதியில் ஊர்ந்தபடி செல்கின்றன. இதில், இருசக்கர வாகனங்களின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
கடந்த சில தினங்களாக பெய்து வரும் மழையில், அப்பகுதி புதைகுழியாக மாறியுள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் மழைக்காலம் துவங்கும் முன், சாலையை சீரமைக்க வேண்டும் என, புகார் அளித்தோம். ஆனால், இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை.
ராதாகிருஷ்ணன், திருவேற்காடு.