ரூ.1.50 கோடி மோசடி சகோதரிகள் கைது
ரூ.1.50 கோடி மோசடி சகோதரிகள் கைது
ரூ.1.50 கோடி மோசடி சகோதரிகள் கைது
ADDED : மார் 13, 2025 11:40 PM

சென்னை, பழைய வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்தவர் சுப்ரமணியன். மளிகை கடை நடத்தி வருகிறார். இவர், சென்னை மத்திய குற்றப்பிரிவில், புகார் ஒன்றை அளித்திருந்தார்.
அதில், வில்லிவாக்கத்தைச் சேர்ந்த சாமுண்டீஸ்வரி,45, தங்கம், சந்திரா, 40, ஆகிய மூவரும், அமைந்தகரை தாலுகா, வில்லிவாக்கம் கிராமம், சர்வே எண்: 170/2 எம்.டி.எச்., சாலையில், 9,108 சதுர அடி இடம் உள்ளது எனக் கூறினர்.
தங்களது பூர்விக சொத்து எனக்கூறிய அவர்கள், அவ்விடத்தை விற்பனை செய்வதாக கூறி, கிரைய ஒப்பந்தம் செய்து கொடுத்து, 1.50 கோடி ரூபாயை பெற்றனர்.
அதன்பின், அவ்விடம் குறித்து விசாரித்தபோது, புறம்போக்கு நிலம் என்பது தெரியவந்தது. எனவே, புறம்போக்கு நிலம் என்பதை மறைத்து, தன்னிடம் பணம் பறித்து மோசடியில் ஈடுபட்டவர்கள் மீது, சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என, குறிப்பிட்டு இருந்தார்.
புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார், மோசடியில் ஈடுபட்ட சாமுண்டீஸ்வரி, அவரது சகோதரி சந்திரா ஆகிய இருவரை, நேற்று கைது செய்தனர். தங்கத்தை தேடி வருகின்றனர்.