ADDED : ஜூலை 24, 2024 12:56 AM
காஞ்சிபுரம்,
காஞ்சிபுரம் மாவட்ட சதுரங்க கழகம், மாநில சதுரங்கக் கழகம் சார்பில், மாநில அளவில் 50 வயதிற்கு மேற்பட்டோருக்கான மூத்தோர் சதுரங்கப் போட்டி, காஞ்சிபுரம், அறிஞர் அண்ணா விளையாட்டு அரங்கில் நடந்தன.
இதில், பல்வேறு மாவட்டங்களில் இருந்து, 60க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர் காஞ்சிபுரம் மாவட்ட சதுரங்கக் கழகத்தின் தலைவர் அப்துல் ஹமீது தலைமை வகித்தார்.
இதில், 50 வயதிற்கு மேற்பட்டோருக்கான போட்டியில், சென்னையைச் சேர்ந்த காசி முதல் பரிசும், கோவை முத்துசாமி இரண்டாம் பரிசும், செங்கல்பட்டு ஸ்ரீதர் மூன்றாம் பரிசும் வென்றனர். 65 வயதிற்கு மேற்பட்டோருக்கான போட்டியில் சென்னை சுப்ரமணி முதல் பரிசும், வேலுார் வசந்தகுமார் இரண்டாம் பரிசும், தர்மபுரி ரமேஷ்குமார் மூன்றாம் பரிசும் பெற்றனர்.