/உள்ளூர் செய்திகள்/சென்னை/புதிய துறைகளின் தொழில்நுட்பம் கருத்தரங்கம் புதிய துறைகளின் தொழில்நுட்பம் கருத்தரங்கம்
புதிய துறைகளின் தொழில்நுட்பம் கருத்தரங்கம்
புதிய துறைகளின் தொழில்நுட்பம் கருத்தரங்கம்
புதிய துறைகளின் தொழில்நுட்பம் கருத்தரங்கம்
ADDED : ஜூன் 23, 2024 10:19 AM

சென்னை: சென்னை தாம்பரம், சேலையூரில் அமைந்துள்ள பாரத் நிகர் நிலை பல்கலைக்கழகத்தில் மின்னணுவியல் மற்றும் தொலைத்தொடர்பு துறை இயல் கல்லூரி பேராசிரியர்களுக்கானஆசிரியர் மேம்பாட்டு திட்டம் வி. எல். எஸ். ஐ., டிசைன் மற்றும் எம்பெட்டட் சிஸ்டம் என்ற தலைப்பில் ஐந்து நாட்கள் கருத்தரங்கம் நடந்தது.
கல்லூரி நிறுவனரும், தலைவருமான ஜெகத்ரட்சகன் எம்.பி., கருத்தரங்கத்திற்கு தலைமை வகித்தார். இதில் நாடு முழுவதும் உள்ள கல்லூரியில் இருந்து 90 பேராசிரியர்கள் பங்கேற்றனர்.
கருத்தரங்கத்தில் மெட்ராஸ் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி மற்றும் அண்ணா பல்கலைக்கழகத்தின் துறை வல்லுநர்கள் சிறப்புரையாற்றி ஆசிரியர்கள் திறன் மேம்பாடு குறித்தும் வளர்ந்து வரும் புதிய துறைகளின் தொழில்நுட்பம் குறித்தும் விரிவாக பேசினர்.