மாணவர்களுக்கு மரக்கன்று நட பயிற்சி
மாணவர்களுக்கு மரக்கன்று நட பயிற்சி
மாணவர்களுக்கு மரக்கன்று நட பயிற்சி
ADDED : ஜூன் 07, 2024 12:09 AM
வேளச்சேரி,
வேளச்சேரியில் உள்ள கிரீன் வேளச்சேரி அமைப்பு சார்பில், வேளச்சேரி - பெருங்குடி ரயில் நிலையம் இடையே, 28,500 மரக்கன்றுகள் நடப்பட்டு உள்ளன. இவை, 10 முதல் 15 அடி உயரம் வரை வளர்ந்துள்ளன.
உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு, நேற்று முன்தினம் 1,000 மரக்கன்றுகள் நடப்பட்டன. இதில், வேளச்சேரி அரசு பள்ளி மாணவர்களுக்கு, மரக்கன்று நட்டு பராமரிக்கும் பயிற்சி வழங்கப்பட்டது.
மண்ணின் தன்மைக்கு ஏற்ப எந்த வகையான மரக்கன்று நட வேண்டும். உரம், தண்ணீர் ஊற்றுவது எப்படி என பயிற்சி வழங்கப்பட்டது.