தனியார் ஊழியரிடம் ரூ.93,000 'ஆட்டை'
தனியார் ஊழியரிடம் ரூ.93,000 'ஆட்டை'
தனியார் ஊழியரிடம் ரூ.93,000 'ஆட்டை'
ADDED : ஜூன் 04, 2024 12:49 AM
வியாசர்பாடி, வியாசர்பாடி, பாலமுருகன் தெருவைச் சேர்ந்தவர் ஜனார்த்தன யாதவ், 44; தனியார் நிறுவன ஊழியர்.
இவர், மே 27ம் தேதி, 'ஆன்லைன் டாஸ்க் பிசினஸ்' என்ற விளம்பரத்தை பார்த்து, மொபைல் போன் ஒன்றிற்கு வாட்ஸாப் வழியாக தொடர்பு கொண்டுள்ளார்.
அப்போது, வாட்ஸாப் வழியாக 'டாஸ்க்' வந்த நிலையில், அதை முடித்ததும், சிறிது பணம் வந்துள்ளது.
மேலும் 3,000, 10,000, 30,000 ரூபாய் செலுத்திய நிலையில், பணம் வரவில்லை. அவர்களிடம் விசாரித்த போது, 50,000 ரூபாய் அனுப்பும்படி கூறியுள்ளனர்.
அதையும் அனுப்பிய நிலையில், 93,000 ரூபாய் திரும்ப வரவில்லை. இது குறித்து புகாரின்பேரில் வியாசர்பாடி போலீசார் விசாரிக்கின்றனர்.