/உள்ளூர் செய்திகள்/சென்னை/ ரூ.84 லட்சம் நில மோசடி தாய், மகன் கைது ரூ.84 லட்சம் நில மோசடி தாய், மகன் கைது
ரூ.84 லட்சம் நில மோசடி தாய், மகன் கைது
ரூ.84 லட்சம் நில மோசடி தாய், மகன் கைது
ரூ.84 லட்சம் நில மோசடி தாய், மகன் கைது
ADDED : ஜூன் 07, 2024 12:16 AM
ஆவடி,
சென்னை கோடம்பாக்கம், வெள்ளாளர் தெருவைச் சேர்ந்த புருஷோத்தமன், ஆவடி மத்திய குற்றப்பிரிவில் கடந்த மாதம் 2ம் தேதி புகார் ஒன்று அளித்திருந்தார்.
அந்த புகாரில் கூறியிருந்தாவது:
திருவள்ளூர் மாவட்டம், கொரட்டூர் கிராமத்தில் என் பெற்றோர் பெயரில் இருந்த 4.10 ஏக்கர் நிலத்தை, 2012ல் என் பெயரில் கிரையம் செய்து கொடுத்தனர். இந்நிலையில், 2022ல், நிலத்தின் மீது வில்லங்க சான்று போட்டு பார்த்த போது, சம்பூர்ணம் என்பவர் போலியான ஆவணங்கள் வாயிலாக, அவரது மகள்கள் புஷ்பா மற்றும் சந்திரா ஆகியோர் பெயரில் பத்திரப்பதிவு செய்தது தெரிந்தது. இந்த நிலத்தின் மதிப்பு 84 லட்சம் ரூபாய். நில மோசடியில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு புகாரில் குறிப்பிட்டிருந்தார்.
இது குறித்து விசாரித்த ஆவடி மத்திய குற்றப்பிரிவு போலீசார், தலைமறைவாக இருந்த திருவள்ளூர் மாவட்டம், காக்களூரைச் சேர்ந்த புஷ்பா, 53, மற்றும் அவரது மகன் தனசேகர், 34, ஆகியோரை நேற்று கைது செய்தனர்.