ரூ.50 லட்சம் நில மோசடி ஆசாமி கைது
ரூ.50 லட்சம் நில மோசடி ஆசாமி கைது
ரூ.50 லட்சம் நில மோசடி ஆசாமி கைது
ADDED : ஜூலை 19, 2024 12:35 AM

ஆவடி, கோடம்பாக்கம், ரங்கராஜபுரத்தைச் சேர்ந்தவர் தெய்வஜோதி, 67. மே 4ல், ஆவடி மத்திய குற்றப்பிரிவில் புகார் அளித்திருந்தார்.
அவர், 'அம்பத்துார் அடுத்த புத்தகரம் கிராமத்தில் தனக்கு சொந்தமாக, 50 லட்சம் ரூபாய் மதிப்பில், 2,580 சதுர அடி நிலம் இருந்தது.
'ஆள்மாறாட்டம் செய்து, என் கையெழுத்தை போலியாக இட்டு, ஏழுமலை என்பவருக்கு, என் நிலம் விற்கப்பட்டுள்ளது. என்னை ஏமாற்றியோர் மீது, நடவடிக்கை எடுக்க வேண்டும்' என குறிப்பிட்டிருந்தார்.
இது குறித்து விசாரித்த மத்திய குற்றப்பிரிவு போலீசார், நில மோசடியில் ஈடுபட்டு தலைமறைவான கொளத்துார், கலெக்டர் நகரைச் சேர்ந்த வேல்முருகன், 40, என்பவரை நேற்று கைது செய்தனர்.