/உள்ளூர் செய்திகள்/சென்னை/ மின்விளக்கு இல்லாததால் பாலத்தில் விபத்து அபாயம் மின்விளக்கு இல்லாததால் பாலத்தில் விபத்து அபாயம்
மின்விளக்கு இல்லாததால் பாலத்தில் விபத்து அபாயம்
மின்விளக்கு இல்லாததால் பாலத்தில் விபத்து அபாயம்
மின்விளக்கு இல்லாததால் பாலத்தில் விபத்து அபாயம்
ADDED : ஜூலை 19, 2024 12:26 AM

குன்றத்துார்,
குன்றத்துாரில் இருந்து ஸ்ரீபெரும்புதுார் செல்லும் நெடுஞ்சாலையில், குன்றத்துார் அருகே செம்பரம்பாக்கம் ஏரியின் உபரிநீர் செல்லும் பகுதியில் மேம்பாலம் உள்ளது.
இந்த வழியே தினமும் ஏராளமான வாகனங்கள் செல்கின்றன.
ஸ்ரீபெரும்புதுார் சுற்றியுள்ள 'சிப்காட்' தொழிற்பூங்கா, குன்றத்துார் அருகே திருமுடிவாக்கம் 'சிட்கோ' தொழிற்பேட்டை தொழிற்சாலைகளில் பணி முடித்து, இரவு நேரத்தில் இந்த வழியாக ஏராளமான தொழிலாளர்கள் செல்கின்றனர்.
இந்த மேம்பாலத்தின் மீது மின் விளக்குகள் இல்லை. இதனால், இரவு நேரத்தில் கும்மிருட்டாக இருப்பதால், மேம்பாலத்தில் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.
மேம்பாலத்தில் மின் விளக்குகள் அமைத்து, வாகன ஓட்டிகள் பாதுகாப்பிற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.